விகாரி ஆண்டின் முற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?

vikari

பிறக்கின்ற ஒவ்வொரு தமிழ் வருடமும் அனைத்து ராசியினருக்கும் பல வகையான பலன்களை தருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் 33ஆவது தமிழ் ஆண்டாக விகாரி தமிழ் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்த விகாரி ஆண்டில் பெரும்பாலான ராசியினருக்கு சாதக, பாதக பலன்கள் சமமாக ஏற்படும் நிலை உள்ளது பலர் அறிந்தது தான். இதில் எந்த ராசியினர் இந்த விகாரி ஆண்டின் முற்பகுதி காலத்தில் அனைத்து விடயங்களிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்:

midhunam

மிதுன ராசியினருக்கு அடிக்கடி உடல் நல பாதிப்புகள் ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். எடுக்கின்ற புதிய காரிய முயற்சிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தடை, தாமதங்கள் ஏற்படும். அடிக்கடி பயணிப்பதால் உடல் மற்றும் மனச்சோர்வு உண்டாகும். பணம் சம்பந்தமான விவகாரங்களில் புதியவர்களை நம்பக் கூடாது. ஒரு சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். பணிகளில் எதிர்பார்த்த பணியிட மாற்றம், பணி நிரந்தரம் போன்றவை தாமதமாகலாம். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரங்களில் சராசரியான வருமானமே இருக்கும்.

கன்னி:

Kanni Rasi

- Advertisement -

கன்னி ராசியினர் சிலருக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிக்கனமின்றி செலவு செய்தால் கடன் வாங்கக் கூடிய சூழல் உண்டாகும். புதியவர்களுக்கு கடன் கொடுப்பது அல்லது பிணைய கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிலருக்கு உறவினர்களோடு மனஸ்தாபங்கள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை, வழக்குகள் போன்றவற்றில் சிறிது இழுபறி நிலை நீடிக்கும். மறைமுக எதிரிகளின் சதிகளால் சிறிது பாதிப்புகள் இருக்கும். தொலைதூரப் பயணங்களால் பெரிய அளவில் அனுகூலங்கள் ஏதும் இருக்காது.

விருச்சகம்:

Virichigam Rasi

விருச்சிகம் ராசியினருக்கு அவ்வப்போது சிறிய அளவிலான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவது பிரச்சனைகளை உண்டாக்கும். தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய கடன் தொகை நீண்ட இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியாத நிலை ஏற்படும். புதிய வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவதில் தடங்கல்கள் ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும்போது எச்சரிக்கை அவசியம்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருந்தால் தங்கம் அதிகம் சேரும்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasis to be vigilant in Tamil. It is also called as Vikari aandu in Tamil or 12 rasi in Tamil or Jothidam rasi in Tamil or Vikari varudam in Tamil.