வீட்டுச் செடிகள், மாடி தோட்டம் செழித்து வளர சாதாரண ரேஷன் அரிசியில் சக்தி வாய்ந்த உயிர் உரம் எளிதாக தயாரிப்பது எப்படி?

plant-rice
- Advertisement -

ரேஷன் அரிசி இருந்தால் போதும் நம் வீட்டில் இருக்கக்கூடிய சின்னஞ்சிறு செடிகள் முதல் மரம், கொடிகளும், மாடி தோட்டத்தில் வளர்க்கக்கூடிய அத்தனை தாவரங்களும் செழித்து வளரக்கூடிய வகையில் உயிர் உரத்தை தயார் செய்து விடலாம். சக்தி வாய்ந்த உரங்களை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று இல்லை. சிறிது நேரத்தை ஒதுக்கினால் எளிமையான பொருட்களை கொண்டும் நாமே இந்த உரங்களை எல்லாம் தயார் செய்து விட முடியும். அப்படியான ஒரு சக்தி வாய்ந்த உயிர் உரம் பற்றிய தோட்ட குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உயிர் உரம் தயாரிக்க முதலில் கால் கிலோ அளவிற்கு ரேஷன் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். நன்கு அரிசி புளித்திருக்கும். இப்பொழுது தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு, இதை மண் கலங்களில் சேகரிக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் எந்த மண் பாத்திரத்திலும் இதை வைக்கலாம். மேலே ஒரு மண் கல தட்டை வைத்து மூடி கொள்ளுங்கள்.

- Advertisement -

அப்படி எதுவும் இல்லை என்றால், மண் அகல் விளக்குகளை வைத்து நீங்கள் மூடலாம். அதன் மீது ஒரு மெல்லிய காட்டன் துணியை விரித்து இறுக்கமாக கயிறை வைத்து கழுத்தை சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலத்தை ஏதாவது ஒரு மண் நிறைந்த பகுதியில் பள்ளத்தை தோண்டி மூடி வைக்க வேண்டும். அப்படி எதுவும் உங்கள் வீட்டை சுற்றி இல்லை என்றால், ஒரு பூந்தொட்டியில் சிறிது மண்ணில் இதை வைத்து மேலே மண்ணை போட்டு வையுங்கள் போதும்.

மூன்று நாட்கள் அப்படியே விட்டுவிட்டால் அரிசியில் நுண்ணுயிர்கள் பெருக ஆரம்பிக்கும். இந்த மூன்று நாட்களும் நீங்கள் மண் சட்டியை தொடக்கூடாது. மண்ணை சுற்றிலும் கொஞ்சம் போல தண்ணீர் விட்டு ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம். மண் கலத்தினுள் தண்ணீர் போய் விடக்கூடாது. மூன்று நாட்களுக்குப் பிறகு நன்கு நுண்ணுயிர்கள் பெருகி பூஞ்சைகள் பிடித்திருக்கும்.

- Advertisement -

இந்த அரிசியில் சம அளவிற்கு அதாவது கால் கிலோ வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். நுண்ணுயிரிகள் பெருகிய ரேஷன் அரிசியுடன், வெல்லத்தை சேர்த்து கலந்து வைத்த பின்பு ஒரு ஏர் டைட் பாக்ஸில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே 20 லிருந்து 25 நாட்கள் வரை விட்டு விடுங்கள். ஒரு பேஸ்ட் போல நன்கு உயிர் உரம் தயாராகி இருக்கும். ஒரு மாதம் வரை இந்த வெளியில் வைத்தே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
ஒரு சின்ன எலுமிச்சை கிளை இருந்தால் கூட போதும். அதை வைத்து ஆறே மாதத்தில் கொத்துக் கொத்தாய் எலுமிச்சைகளை காய்க்க வைத்து விடலாம்.

10 லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு உயிர் உரத்தை நன்கு கலந்து எல்லா விதமான செடிகளுக்கும் ஒரு மக்கு வீதம் தினமும் கொடுத்து வரலாம். இப்படி செய்வதன் மூலம் செடிகள் அனைத்தும் நன்கு செழித்து வளர துவங்கும். பச்சை பசேல் என பூச்செடிகளும், காய்கறி செடிகளும் செழித்து கொத்துக்கொத்தாக பூக்களையும், பழங்களையும் வாரி வழங்கும். பூக்காத செடி கூட பூக்கத் துவங்கும் அற்புதம் நிகழும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -