ரேஷன் அரிசியில் இந்த 1 பொருளை சேர்த்து மாவு அரைத்தால் பிறகு, இட்லிக்கு மாவு அரைச்சா ரேஷன் அரிசியில் தான் மாவு அரைபேன்னு அடம் பிடிப்பீங்க. அத்தனை சுவையான பஞ்சு போல இட்லி கிடைக்கும்.

soft-idli-batter
- Advertisement -

ரேஷன் அரிசியில் பெரும்பாலும் எல்லோருக்குமே பச்சரிசி புழுங்கல் அரிசி கிடைக்கின்றது. அந்த அரிசியை வாங்கிய உடனே தூசு தும்பு கல்லு இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து ஸ்டோர் செய்து வைத்து விட்டால் இட்லி தோசைக்கு மாவு அரைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து இட்லிக்கு மாவு ஆட்டி பாருங்க. இட்லி வெள்ளையா பஞ்சு போல புசுபுசுன்னு கிடைக்கும். இது ஒரு புது குறிப்பு. குறிப்பை படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். பிறகு ரேஷன் அரிசியில் மட்டும் தான் உங்க வீட்டில் இட்லி சுட்டு சாப்பிடுவீங்க. சரி வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த சூப்பரான குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

அரைக்கும் முறை

ரேஷன் புழுங்கல் அரிசி – 4 டம்ளர், ரேஷன் பச்சரிசி – 2 டம்ளர், உளுந்து – 3/4 டம்ளர், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன். புழுங்கல் அரிசி பச்சரிசி இரண்டையும் ஒன்றாக போட்டு, கல் உப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். குறைந்தது 7 லிருந்து 8 முறையாவது கழுவ வேண்டும். தண்ணீர் நன்றாக தெளிவாக வர வேண்டும்.

- Advertisement -

அரிசி வெள்ளையாக வேண்டும். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி, இந்த அரிசியோடு நாம் சேர்க்கப் போகும் அந்த ரகசிய பொருள் ‘பொட்டுக்கடலை’. 6 டம்ளர் அரிசிக்கு, 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து ஊற வைத்து விடுங்கள். ஐந்து மணி நேரம் ஊற வையுங்கள். (அரிசியோடு சேர்ந்து பொட்டுக்கடலையும் தண்ணீரில் ஊறட்டும்.)

அடுத்து உளுந்தை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு 2 முறை நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அப்படியே ஊற வைத்த உளுந்தை கிண்ணத்தோடு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் போதும். அடுத்தபடியாக தனியாக ஒரு கிண்ணத்தில் வெந்தயம் போட்டு, ஊற வைக்க வேண்டும். வெந்தயமும் 5 மணி நேரம் ஊற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

எல்லா பொருட்களும் ஊறிய பின்பு கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரோடு போட்டு ஆட்டுங்கள். வெந்தயமே புசுபுசுவென பந்து போல பொங்கி நன்றாக அரைபட்டு நமக்கு கிடைக்கும். வெந்தயம் நன்றாக அரைபட்டு வந்தவுடன் அதோடு ஊற வைத்த உளுந்தை பிரிட்ஜில் இருந்து எடுத்து போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உளுந்து ஊற வைத்த ஜில் தண்ணீர் தெளித்து ஆட்ட தொடங்குங்கள். உளுந்து மொழுமொழுவென பந்து போல பொங்கி வந்ததும், உளுந்தை வழித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஊற வைத்திருக்கும் அரிசி, பொட்டு கடலை தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். மாவு மொழு மொழுன்னு ரொம்பவும் நைசாக அரைபடக் கூடாது. அதே சமயம் ரொம்பவும் கொரகொரப்பாக இருக்கக் கூடாது. பார்த்தால் நன்றாக அரிசி அரைபட்டுது போல இருக்கும்.

- Advertisement -

கையில் எடுத்து தடவி பார்த்தால் லேசான கொரகொரப்பு இருக்க வேண்டும். அந்த பக்குவத்தில் அரிசி மாவையும் ஆட்டி உளுந்தோடு போட்டு மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு வழக்கம் போல கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைத்து விடுங்கள். பிறகு புளித்த மாவை அடியோடு சேர்த்து கலக்கி விட்டு வழக்கம் போல இட்லி வாத்து எடுத்து பாருங்கள். உங்களுக்கே இட்லி எப்படி வந்தது என்பது தெரியும்.

இதே இட்லி மாவில் தோசையும் வார்க்கலாம். பணியாரமும் வார்க்கலாம். சொன்னா கூட யாருமே நம்ப மாட்டாங்க. இந்த இட்லி ரேஷன் அரிசியில் செய்தது என்று. பச்சரிசி போடுவதால் இட்லி மொரப்பாக இருக்குமோ என்று பயப்படாதீங்க. நிச்சயம் சாப்ட் ஆகத்தான் வரும். அதேசமயம் வெள்ளையாக வீட்டில் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வெறும் ரேஷன் அரிசியில் பச்சரிசி சேர்க்காமல் பஞ்சு போன்ற சாஃப்ட்டான இட்லி செய்ய, இப்படி மாவு அறைச்சாலே போதும். இந்த முறையில மாவு அரைக்க எதையுமே எக்ஸ்ட்ராவா சேர்க்க தேவையே இல்லை.

தோசை மொறுமொறுப்பாக சூப்பராக கிடைக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ஒருமுறை உங்க வீட்டுல ரேஷன் அரிசியில் மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி இட்லி மாவு அரைத்து பாருங்க. பிறகு இட்லி அரிசி வாங்கக்கூடிய செலவு மிச்சமாகும். உளுந்து மிகக் குறைந்த அளவு தான் சேர்த்து இருக்கின்றோம். ஆக அதுவும் நமக்கு மிச்சம் தான்.

- Advertisement -