வெறும் ரேஷன் அரிசியில் பச்சரிசி சேர்க்காமல் பஞ்சு போன்ற சாஃப்ட்டான இட்லி செய்ய, இப்படி மாவு அறைச்சாலே போதும். இந்த முறையில மாவு அரைக்க எதையுமே எக்ஸ்ட்ராவா சேர்க்க தேவையே இல்லை.

ration arisiyil idly
- Advertisement -

இட்லிக்கு மாவு அரைப்பதே பெரிய ஒரு வேலை தான். அரிசி உளுந்தின் அளவு கொஞ்சம் தவறினால் கூட இட்லி கல் போல மாறி விடும். இந்தக் காரணத்தினாலே பெரும் பாலும் இட்லிக்கு ரேஷன் அரிசியை தவிர்த்து விடுகிறார்கள். அல்லது ரேஷன் அரிசியுடன் மற்ற அரிசி கலந்து தான் அரைப்பார்கள். இந்த முறையில் வெறும் ரேஷன் அரிசி, உளுந்தை மட்டும் வைத்து பஞ்சு போன்ற சாஃப்ட்டான இட்லி மாவு அரைப்பது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

அரைக்கும் முறை

இதற்கு ஏழு கப் ரேஷன் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்று அளவில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு நான்கு மணி நேரம் சுத்தமான தண்ணீர் ஊற்றி வைத்துக் விடுங்கள்.

- Advertisement -

ரேஷன் அரிசியை பொறுத்த வரையில் வெள்ளையாக வர வேண்டும் என நினைத்து அதிக தண்ணீர் ஊற்றி கழுவும் போது அந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைத்துமே வீணாகி விடும். கடைகளில் விற்கும் அரிசி அதிகமாக பாலிஷ் செய்து இருப்பதால் அந்த நிறத்தில் இருக்கிறது. ஆனால் அந்த அரிசியில் எந்த விதமான ஒரு சத்தும் கிடையாது. ரேஷன் அரிசி நல்ல சுத்தமாக இருந்தால் இரண்டு முறை கழுவினாலே போதும். கொஞ்சம் தூசி அதிகமாக இருந்தால் மேலும் ஒரு முறை கழுவிக் கொள்ளுங்கள் போதும்.

இப்போது உளுந்தை முதலில் அரைத்து எடுத்துக் கொள்வோம். உளுந்தை கிரைண்டரில் சேர்த்து அரைக்கும் போது உளுந்து ஊற வைத்த தண்ணீரை வைத்து தான் அரைக்க வேண்டும். அந்தத் தண்ணீரில் நாம் கை வைத்து தொட்டு எடுத்து தெளித்து தெளித்து மாவு அரைத்து எடுக்கும் பொழுது மாவு நன்றாக பொங்கி வரும்.

- Advertisement -

இப்படி 15 நிமிடம் வரை அரைத்தாலே போதும் மாவு நன்றாக பொங்கி வரும். ஒரு வேளை உங்கள் கிரைண்டர் அதிக நேரம் அரைக்கும் என்றால் அப்போது ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கியூப் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் கிரைண்டரின் சூட்டுக்கு உளுந்து மாவு உபரியாக்காமல் இட்லி கல் போல வந்து விடும்.

உளுந்தை அரைத்து எடுத்த பிறகு அரிசியை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரிசியை மை போல அரைக்காமல் கொஞ்சம் நற நற வென்று இருக்கும்படி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக அரிசி எடுக்கும் முன்பு ஏற்கனவே அரைத்து வைத்த உளுந்தை இத்துடன் சேர்த்து மாவிற்கு தேவையான உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் அரை பட்டவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ராத்திரிக்கு என்ன டின்னர் செய்யறதுன்னு குழப்பமா இருக்கா? கோதுமை மாவு இருந்தா போதுமே! டக்குனு இந்த புதுவிதமான கோதுமை ஊத்தப்பம் தயார்.

இந்த மாவுவை அப்படியே எட்டு மணி நேரம் வரை புளிக்க விடுங்கள். மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்றலாம். வெறும் ரேஷன் அரிசியை வைத்து பஞ்சு போன்ற சாஃப்டான இட்லி வர இந்த முறையில் மாவு அரைத்து பாருங்கள்.

- Advertisement -