- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரேஷன் கோதுமை மாவில் கூட சப்பாத்தி பூரியை போல உப்பி சாப்டா வர இந்த ஒரு...

ரேஷன் கோதுமை மாவில் கூட சப்பாத்தி பூரியை போல உப்பி சாப்டா வர இந்த ஒரு பொருள் மட்டும் சேர்த்து செஞ்சா போதும். இதுவரைக்கும் இப்படி ஒரு சாப்ட் சப்பாத்தியை நீங்க சாப்பிட்டு இருக்க வாய்ப்பே இல்லை. ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -

பொதுவாகவே ரேஷன் கோதுமை மாவில் சப்பாத்தி செய்தால் சாஃப்ட்டாக வராது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் ரேஷன் கோதுமையை மாவில் ரொம்ப சுவையாகவும், அதே நேரம் சாப்டாகவும் பூரி போல உப்பி வரும் படியாக சப்பாத்தியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க அந்த சப்பாத்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் அரை டீஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு, சேர்த்த பிறகு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எந்த எண்ணையாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

நெய் சேர்த்தால், இன்னும் சுவை அதிகமாகவே கிடைக்கும். அதன் பிறகு ரெண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் சேர்த்து பிசையும் போது மாவு அதிக மிருதுவாக மாறி சப்பாத்தி நீங்கள் சுட்டு அடுத்த நாள் சாப்பிட்டால் கூட சாப்ட்டாக இருக்கும். அதன் பிறகு இந்த மாவை பிசைய கை பொறுக்கும் சூட்டில் தண்ணீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, தளர்வாக மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

எப்போதும் சப்பாத்திக்கு பிசைவது போல் இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாகவே பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு மாவின் மேலே எண்ணெய் தடவி ஒரு காட்டன் துணியை போட்டு பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் வரை இந்த மாவு அப்படியே ஃப்ரிட்ஜில் இருக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து உங்களுக்கு தேவையான அளவில் மாவை உருண்டைகளை உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் மாவு உருண்டைகளை வைத்து மாவை தேய்த்து கொள்ளுங்கள். மாவை திரட்டும் போது எண்ணெய் தேய்த்து திரட்டினால் சப்பாத்தி சுட்டு நீண்ட நேரம் ஆனால் கூட, மேலே வறண்டு போகாமல் இருக்கும்.

- Advertisement -

இந்த முறையில் மாவை பிசைந்து வைத்து சப்பாத்தி செய்து பாருங்கள். இது ரேஷன் கோதுமை மாவில் செய்த சப்பாத்தி என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சாப்டாகவும், ருசியாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தினமும் இட்லி தோசை பூரி பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்குதா? பேச்சுலர்ஸ் கூட சுலபமாக செய்யக்கூடிய இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

அதுமட்டுமின்றி வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த மாவை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், அவர்களுக்கு சப்பாத்தி செய்யும் போது மிகவும் எளிதாக இருக்கும். இந்த முறையை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்