ரேஷன் டீத்தூள் போட்டு டீ குடிக்க பிடிக்கலையா? அப்படின்னா இந்த பொருளை சேர்த்து பாருங்க! இனி அந்த டீ தான் வேணும்னு சொல்லுவாங்க.

ration-tea-powder
- Advertisement -

ரேஷன் கடைகளில் கொடுக்கும் டீத்தூள் ஆனது சாதாரண தேயிலையை விட சற்று வித்தியாசமாக இருக்கும். அதில் போடப்படும் டீ யானது சிலருக்குப் பிடிக்கும் என்றாலும், பலருக்கு பிடிப்பதில்லை. ரேஷன் டீ தூள் மட்டுமல்ல, சாதாரண டீ தூள் கூட மசாலா டீயாக மாறும் பொழுது தான் அதன் சுவை அதிகரிக்கும். இப்பொழுது பிரத்தியேகமாக மசாலாக்கள் கலந்த டீ தூள் விற்பனைக்கு ஏகப்பட்ட பிராண்டுகளில் வந்துள்ளன. ஆனால் இயற்கையாக நம் வீட்டிலேயே இப்படி டீ தூளுடன் சில பொருட்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் டீ-யே வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் கேட்டு குடிப்பார்கள். சரி அப்படி நாம் எந்த பொருட்களை எல்லாம் சேர்க்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

tea-making1

சாதாரண டீ தூள் கொண்டு போடப்படும் டீ ஆனது அதிக ருசியை கொடுப்பதில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் மசாலா கலந்த டீ தூளை போட்டு குடிப்பதற்கும் நமக்கு விருப்பம் இல்லாமல் போய் விடும். எனவே எந்த நேரத்தில் எப்படியான டீயை குடிக்க வேண்டுமோ அப்படி தயாரித்து வைத்துக் கொண்டால் நமக்கு தேவையான பொழுது அவற்றை பயன்படுத்தி அந்த கப் தேனீரை அந்தப் பொழுதில் சுவை மிகுந்ததாக மாற்றி விடலாம்.

- Advertisement -

நீங்கள் ரேஷன் கடையில் இருந்து வாங்கி வரும் ஊட்டி தேயிலை கொண்டு டீ தூள் போட வேண்டும் என்று நினைத்தால் அதில் மற்ற தேயிலை தூளை விட சற்று அதிகமாக சேர்க்க வேண்டியிருக்கும். ரேஷன் டீ தூள் ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல குடிப்பதற்கு டீக்கடைகளில் கொடுக்கும் பழங்காலத்து டீ போல தான் சுவையாக இருக்கும். எனினும் அதனுடன் இந்த பொருட்கள் கூடுதலாக சேரும் பொழுது இன்னும் சுவையை அதிகரித்துக் கொடுக்கும்.

head-ache

மேலும் தலைவலி, தலைபாரம், வாந்தி, குமட்டல், நெஞ்சு சளி, கபம் போன்ற தொல்லைகள் நீங்கவும் அடிக்கடி இந்த மசாலா டீ போட்டு குடித்து வந்தால் சர்வ ரோக நிவாரணியாகும் செயல்படும். ரேஷன் ஊட்டி டீ தூள் பயன்படுத்தும் பொழுது தனியாக ஒரு மசாலாவை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? என்பதை கீழே பார்ப்போம்.

- Advertisement -

மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:
சுக்கு – ஒரு துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 5

tea-powder

சுக்கை முதலில் இடித்து வைத்துக் கொள்ளுங்கள். லவங்கப்பட்டை பெரிதாக இருந்தால் அதனை ஒன்றிரண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா கலவையை தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். நீங்கள் எப்பொழுது எல்லாம் ரேஷன் டீத்தூள் பயன்படுத்துகிறீர்களோ! அப்பொழுதெல்லாம் இந்த மசாலாவை கூடுதலாக ஒரு அரை டீஸ்பூன் சேர்த்தால் போதும் வீடே மணக்கும் சுவையான மூலிகை டீ தயாராகிவிடும். இந்த டீயை மட்டும் குடித்தால் டீயே பிடிக்காதவர்கள் கூட மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு குடிப்பார்கள்.

tea-making

இதே போல ரேஷன் டீ தூள் அல்லாமல் மசாலா சேர்க்காத சாதாரண டீ தூள் பயன்படுத்தினாலும் நீங்கள் அரை டீஸ்பூன் அளவிற்கு இந்த மசாலாவை சேர்த்து போட்டால் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். சிலர் வெறும் ஏலக்காயை மட்டும் பொடித்து வைத்து அதனை டீ தூள் உடன் சேர்ந்து கலந்து வைத்துக் கொண்டு விடுவார்கள். டீ போடும் பொழுது எல்லாம் ஏலக்காயின் மணம் நம்மை எங்கோ கொண்டு செல்லும். அப்படியிருக்க இந்த மசாலா ஆரோக்கியத்திற்கும் நல்லது மற்றும் நமக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.

- Advertisement -