- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரேஷன் கடையில் கொடுக்கும் பாமாயிலை இதை செய்யாமல் பயன்படுத்தாதீங்க! யாரெல்லாம் பாமாயில் உபயோகிக்க கூடாது தெரியுமா?

ரேஷன் கடையில் கொடுக்கும் பாமாயிலை இதை செய்யாமல் பயன்படுத்தாதீங்க! யாரெல்லாம் பாமாயில் உபயோகிக்க கூடாது தெரியுமா?

- Advertisement -

எந்த வகை எண்ணெயாக இருந்தாலும் விலை சற்று உயர்ந்து தான் காணப்படுகிறது. சமீப காலத்தில் எண்ணெயின் விலை உயர்வதற்கு காரணம், அதன் பயன்பாடு அதிகரித்து வருவதே ஆகும். சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் ஆரோக்கியமும் ஒளிந்து கொண்டுள்ளது. ரேஷன் கடையில் கொடுக்கும் எண்ணெய் பாமாயில் ஆகும். ஒரு விதமான பனை வகை மரத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் விலை மலிவானது என்பதால் எல்லோருடைய வீடுகளிலும் இதை பயன்படுத்தி வருகிறோம்.

ரேஷன் கடையில் கொடுக்கப்படும் பாமாயிலில் ஏராளமான இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது புதிதாக நம் உடம்பில் உருவாகக்கூடிய கெட்ட செல்களை சுலபமாக ஒழித்துக் கட்டிவிடும். புற்றுநோய் செல்களை கூட அழிக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண் சார்ந்த பிரச்சினைகளையும், தெளிவான பார்வையையும், ரெட்டினா குறைபாட்டையும் சரி செய்யும்.

- Advertisement -

இதில் இருக்கும் விட்டமின் ஈ இளமையான சருமத்தையும், ஹார்மோன் சமநிலையையும் கொடுக்கும். வைட்டமின் ஏ இதில் அதிகம் இருப்பதால் இக்குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக பாமாயில் பயன்படுத்தலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பாமாயிலை நேரடியாக அப்படியே பயன்படுத்தக் கூடாது என்பதை தான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும்.

இதில் கொலுப்பு சத்து அதிகம் உண்டு என்பதால் குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக பாமாயிலை தவிர்க்க வேண்டும். மேலும் புதிதாக பாமாயில் பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருக்கும் பித்தம் சில உடல் நல குறைகளை ஏற்படுத்தி விடும். வாந்தி, பேதி, மயக்கம் போன்றவற்றை உண்டாகி விடக்கூடிய அபாயம் உண்டு என்பதால் பாமாயிலில் இருக்கும் பித்தத்தை முதலில் முறியடிக்க வேண்டும். அதன் பின்னர் பாமாயிலை பயன்படுத்துவதால் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும்.

- Advertisement -

ரேஷன் கடையில் இருந்து பாமாயில் வாங்கும் பொழுது அது திடமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதை முதலில் ஒரு அடிகனமான வாணலி அல்லது இரும்பு வாணலியில் ஊற்றி லேசாக சூடு படுத்த வேண்டும். கொதிக்க வைத்து விடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் லேசாக சூடேறி தெளிந்ததும், ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். புளியில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, கொழுக்கட்டைக்கு பூரணம் பிடிப்பது போல புளிக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளவிற்கு கல் உப்பை திணித்துக் கொள்ளுங்கள். பின்னர் புளியை கொழுக்கட்டை போல உள்ளே இருக்கும் உப்பு வெளியில் வராதவாறு உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். பெரிய நெல்லிக்காய் அளவிற்கு இஞ்சி ஒன்றை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் லேசாக சூடேறியதும் இந்த புளி உருண்டை மற்றும் இஞ்சி துண்டை சேர்த்து விடுங்கள். எண்ணெய்குள் இருக்கும் எல்லா பித்தத்தையும் இந்த புளி உருண்டை மற்றும் இஞ்சி மொத்தமாக தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்ளும். புளி அப்படியே கருப்பு நிறமாக மாறிவிடும். பபுள்ஸ் பபுள்ஸ் ஆக மேலே எழும். இந்த பபுள்ஸ் அடங்கியதும் புளி மற்றும் இஞ்சியை தனியாக எடுத்து குப்பையில் தூக்கி போட்டு விடுங்கள். இது நமக்கு தேவையில்லை. பின்னர் நன்கு பாமாயில் குளிர்விக்க வேண்டும். சூடு ஆறி குளிர்ந்ததும் துணி வடிகட்டியால் நன்கு வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக கொள்ளுங்கள். இனி இந்த பாமாயில் நீங்கள் பயன்படுத்துவதால் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல், நல்ல சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.

சற்று முன்