ரேஷன் கடையில் இருந்து வாங்கும் பாமாயிலை இனி யாரும் வீணாக்காதீர்கள்! பாமாயிலில் இருக்கக்கூடிய அதிகப்படியான பித்தத்தை எப்படி வெளியே எடுத்து பயன்படுத்துவது? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

பெரும்பாலும் நம்மில் பலபேர் பாமாயிலை கடையிலிருந்து, காசுகொடுத்து வாங்க மாட்டோம். ஆனால் கட்டாயம் ரேஷன் கடையில் இருந்து நமக்கு விலை குறைவான பாமாயில் கிடைக்கின்றது. சில பேர் இந்த பாமாயிலை விற்று விடுவார்கள். சில பேர் இந்த பாமாயிலை தங்களுடைய வீட்டிற்கு சமையலுக்கு பயன் படுத்திக் கொள்வார்கள். விலை குறைந்த இந்த பாமாயிலை விற்காமல், வீணாக்காமல் கட்டாயம் நம் எல்லோராலும் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

palm-oil

பொதுவாகவே, பாமாயிலை சமையலுக்குப் பயன்படுத்தினால் நம்முடைய உடலில் பித்தம் அதிகமாக சேர்ந்துவிடும். இதனால் தான் இந்த பாமாயிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கும் கொழுப்பு சத்து நம்முடைய உடலின் எடையை அதிகப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உடலில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், இந்த எண்ணெயை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சரி, உங்களுடைய வீட்டில் நீங்கள் பாமாயிலை தான் பயன்படுத்துகிறார்கள் என்றால், அதன் மூலம் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

palm-oil1-images

ஒரு இரும்பு கடாயில் பாமாயிலை ஊற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்த பாமாயிலை ஊற்றும் போதே தெரியும். நெய் கொஞ்சம் கட்டி பதத்தில் இருந்தால், எப்படி வெள்ளை நிறத்தில் இருக்குமோ அப்படி இருக்கும் அல்லவா? அந்த பாமாயிலை முதலில் வாணலியில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடு செய்யுங்கள்.

- Advertisement -

அது அப்படியே சூடாகட்டும். அதற்குள் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய புளி, கல்லுப்பு, இஞ்சி ஒரு சிறிய துண்டு இந்த மூன்று பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் புலியை உருண்டையாக்கி அதன் நடுவே சிறிய துளை போட்டு, அதில் கல்லுப்பு நிரப்ப வேண்டும். கொழுக்கட்டையில் பூரணம் வைப்பது போல்தான்.

புலி உருண்டைக்கு நடுவே இருந்து கல்லுப்பு எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வரக்கூடாது. புளியின் நடுவே கல் உப்பை நிரப்பி உருண்டை செய்து, அந்த புலியை வடை போல் உள்ளங்கையில் வைத்து ஒரு தட்டி, வடை போல் ஆக்கிவிட்டு, சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். புளியில் கொட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பின் சிறிய துண்டு இஞ்சியையும் அந்த எண்ணெயில் போட்டு விடுங்கள் 5 லிருந்து 7 நிமிடங்கள் அந்த எண்ணெயை மிதமான தீயில் சூடானால் போதும்.

- Advertisement -

salt1

எண்ணையில் போட்ட புளியின் சிடசிடபும், இஞ்சியின் சிடசிடபும் அடங்கிவிடும். அதன் பின்பு அந்த எண்ணெயை எடுத்து ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பாருங்கள். அந்த எண்ணெயின் நிறமும் மாறி இருக்கும். அந்த எண்ணெயில் இருக்கும் பித்தம் அனைத்தையும் அந்த புளியும் இஞ்சியும் உறிஞ்சி எடுத்திருக்கும். சாதாரணமாக பயன்படுத்தும் எண்ணெ நிறத்திற்கு வந்திருக்கும், உங்கள் வீட்டு பாமாயில். இப்போது இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நம்முடைய உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. (எண்ணையை புகை வரும் அளவிற்கு காய்ச்சினால், எண்ணெயில் தீப்பற்றிக் கொள்ளும். உஷாராக மிதமான தீயில் வைத்து காய விடுங்கள் ஜாக்கிரதை.)

Ginger - Inji

உங்களுடைய வீட்டில ரேஷன் பாமாயில் எண்ணெயை பயன்படுத்துகிறீர்களா அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்களா? அவர்களுக்கும் இந்த டிப்ஸை சொல்லுங்கள். கட்டாயம் உபயோகமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் கேடு வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வீடு நிலம் போன்ற சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு நினைவாக, இந்த மந்திரத்தை 15 நாள் உச்சரித்தாலே போதும்! அந்த முருகப்பெருமானே அவதாரமெடுத்து வந்து நிச்சயம் உதவி செய்வார்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -