நாளைக்கு புத்தாண்டு! உங்க வீட்ல இந்த ரவை கேசரி ட்ரை பண்ணி பாருங்க! கல்யாண வீட்டில சாப்பிட்ற அதே டேஸ்ட்ல ரவை கேசரி எப்படி செய்வது?

நம் வீட்டில் வரக்கூடிய எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு 10 நிமிடத்தில் செய்யக் கூடிய இனிப்பு பலகாரம் தான் இந்த ரவை கேசரி. இருப்பினும் இந்த ரவை கேசரியை பக்குவமாக சில பேருக்கு செய்யத் தெரியாது. குறிப்பாக கல்யாண வீடுகளில் அல்வா பதத்தில் ரவை கேசரி செய்வார்கள். அந்தப் பக்கத்தில் நம்முடைய வீட்டில் சுலபமான முறையில், எந்தெந்த அளவுகளை வைத்து ரவை கேசரி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

rava-kesari4

ரவை கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப், சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 3 கப், சமையல் எண்ணெய் – 50ml, நெய் – 50ml, கலர் பவுடர் – 1 சிட்டிகை, தேவையான அளவு முந்திரி, ஏலக்காய் தூள், உலர் திராட்சை.

சமையல் எண்ணெய் என்பது நல்லெண்ணையும் கடலெண்ணெய் இருக்கக்கூடாது. ரீஃபைண்ட் ஆயிலை தான் கேசரிக்கு பயன்படுத்த வேண்டும். கலர் பவுடர் தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ண கலர் பவுடரை பயன்படுத்தி கொள்ளலாம். இல்லை என்றாலும் வெள்ளை நிறத்தில் கூட கேசரியை தயார் செய்து கொள்ளலாம்.

rava-kesari3

Step 1:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு நெய் விட்டு, முந்திரி உலர் திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

Step 2:
அதே கடாயில் மீண்டும் 1 டேபிள்ஸ்பூன் அளவு நெய் ஊற்றி, ரவையை போட்டு வாசம் வரும் வரை சிவக்க வறுக்க வேண்டும். இதையும் ஒரு தட்டில் எடுத்து மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

rava-kesari3

Step 3:
அடுத்தபடியாக 1 கப் ரவைக்கு, 3 கப் அளவு தண்ணீரை அந்த கடையில் ஊற்ற வேண்டும். எந்த கப்பில் ரவை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் தண்ணீரையும் அல்லது கடாயில் ஊற்றி விடுங்கள். இந்த தண்ணீரோடு எடுத்து வைத்திருக்கும் 50ml எண்ணெயையும், 50ml நெய்யையும் முக்கால் பாகத்தையும் ஊற்றி விட வேண்டும். கொஞ்சம் நெய்யை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஊற்ற வேண்டும்.

rava-kesari3

Step 4:
தண்ணீர் எண்ணெய் நெய் மூன்றும் ஒன்றாக சேர்ந்து தளதளவென கொதி வந்தவுடன், வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி, கைவிடாமல் கட்டி பிடிக்காமல் கலந்துவிட வேண்டும். வறுத்த ரவை தண்ணீர் அனைத்தையும் சட்டென உறிஞ்சு கொள்ளும். ரவை வேகாது உடனே பயந்து விடாதீர்கள்.

rava-kesari5

Step 4:
அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு விட்டால் 5 நிமிடத்தில் சூப்பராக வெந்து இருக்கும். அதன் பின்பு 1 கப் அளவு சர்க்கரையை, ரவையோடு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். சர்க்கரையை கொட்டிய பின்பு, ரவை வேகாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இனிப்பு அதிகமாக வேண்டும் என்றால் 1 1/4 கப் அளவு சர்க்கரையை கூட சேர்த்துக் கொள்ளலாம்.

rava-kesari6

ரவை யோடு சர்க்கரையை சேர்த்து கலக்கும்போது, சர்க்கரை உருகி ரவை கேசரி அல்வா பதத்திற்கு வரும். கைவிடாமல் கிளறி, இறுதியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சை ஏலக்காய் பொடி போட்டு, ரவை கேசரி நன்றாக கிளறிவிட்டு இறுதியாக மீதம் இருக்கும் நெய்யை மேலே ஊற்றி விட்டால் போதும். தளதளவென அல்வா பதத்துக்கு ரவை கேசரி தயார்! ஒரு குழி கரண்டியில் அழுத்தமாக இந்த ரவை கேசரி கையை எடுத்து, அழுத்தமாக ஒரு பிளேட்டில் வைத்து, அலங்காரம் செய்து பரிமாறுங்கள். உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லோரும் நாளைக்கு சந்தோஷப்படுவாங்க. புத்தாண்டுக்கு ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
பெண்கள், நாளை வரக்கூடிய புத்தாண்டு தினத்தை இப்படித்தான் வரவேற்று பாருங்களேன்! உங்க வீட்டில் சண்டை சச்சரவுகள் காணாமல் போவதற்கு இது கூட ஒரு நல்ல வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.