உங்க வீட்டில் ரவை உப்புமாவும், தேங்காய் சட்டினியும் இனி இப்படி செஞ்சு பாருங்க யாருமே வேண்டாம் என்று உதாசீனப்படுத்த மாட்டாங்க, ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க!

rava-upma-coconut-chutney
- Advertisement -

ரவா உப்புமா என்றாலே யாருக்கும் பிடிக்காது. உதிரி உதிரியாக இல்லாமல் இருந்தால் யாருக்குத்தான் ரவா உப்புமா பிடிக்கும்? ரவா உப்புமா என்பது சாதாரண ஒரு ரெசிபியாக இருந்தாலும் அதை சுவையாக செய்ய முடியாமல் உள்ளவர்களும் உண்டு. ரவா உப்புமாவிற்கு தேங்காய் சட்னி வைத்து ருசியாக இப்படிக் கொடுத்து பாருங்க யாருமே வேண்டாம் என உதாசீனப்படுத்தாமல் கேட்டு கேட்டு இனி சாப்பிட ஆரம்பிப்பார்கள். ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் எப்படி எளிதாக சுவையாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரவா உப்புமா செய்வதற்கு முதலில் நீங்கள் எந்த அளவிற்கு ரவையை எடுத்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு ஒன்றரை பங்கு அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதற்கு மேல் சேர்த்தால் ரவை உதிரி உதிரியாக நிச்சயமாக வராது, குழைந்து போய்விடும். அது போல ரவா உப்புமா செய்வதில் சில ரகசிய வழிமுறைகளும் உண்டு, அதன்படி செய்தால் தான் அது உதிரி உதிரியாக வரும். அதே போல ரவா உப்புமா செய்வதற்கு வெங்காயமும், இஞ்சியும் ரொம்பவே முக்கியம். இந்த இரண்டின் பிளேவர் இருந்தால் ரவா உப்புமா இன்னும் தூக்கல் சுவையாக இருக்கும்.

- Advertisement -

இஞ்சியைத் துருவி அரை ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். அது போல ஒரு கப் ரவைக்கு ஒரு வெங்காயத்தை சேர்க்க வேண்டும். முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்பு உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். அவை பொன்னிறமாக வறுபட்டதும் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் எது இருக்கிறதோ, அதை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்து, பின்னர் நீங்கள் துருவி வைத்துள்ள இஞ்சி மற்றும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வாசம் வர வறுக்க வேண்டும்.

பின்பு ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். அது போல நீங்கள் எத்தனை காப் ரவையை எடுத்துக் கொள்கிறார்களோ, அத்தனை அளவிற்கு தண்ணீரை பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது ரவைக்கு தேவையான தண்ணீரை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவிடாமல் மெதுவாக கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த அளவில் தண்ணீர் சேர்த்தால் நீங்கள் ரவையை சேர்த்த உடனேயே ஒரே நிமிடத்தில் மொத்த ரவையும் தண்ணீரை உறிந்து விடும்.

- Advertisement -

கட்டிகள் இல்லாமல் ரவையைக் கிண்டியதும் தண்ணீர் உரிந்து விடுவதற்குள் ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். ஒரு நிமிடத்தில் மீண்டும் எடுத்து ஒரு முறை பிரட்டி விடுங்கள், அழுத்தம் கொடுத்து நன்கு பிரட்டி மறுபடியும் மூடி வையுங்கள். இது போல் உதிரி உதிரியாக வரும் வரை மூடி வைத்து அவ்வப்போது திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் சூப்பராக வெந்து வரும். உங்களுக்கு தேவை என்றால் நெய் விட்டுக் கொள்ளுங்கள், இன்னும் சுவையாக இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னி செய்ய அரை மூடி தேங்காயுடன், 5 சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அதிகம் நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து கடுகு, உளுந்து தாளித்து போட்டால் சுவையான தேங்காய் சட்னியும் நொடியில் தயாராகிவிடும்! இப்படி செஞ்சு கொடுத்தா யாருமே உப்புமாவா? வேண்டாம், என்று இனி சொல்ல மாட்டாங்க!

- Advertisement -