உதிரி உதிரியான ரவை உப்புமா செய்வதற்கு தண்ணீரின் அளவு என்ன? ரேஷியோ தெரிந்தால் இனி ரவை உப்புமாவை சொதப்பவே மாட்டீங்க!

- Advertisement -

உதிரி உதிரியான ரவை உப்புமா செய்வதற்கு முதலில் ரவை மற்றும் தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உதிரி உதிரியாக சூப்பராக ரவை உப்புமா செம டேஸ்ட்டில் வரும். இல்லை என்றால் ரவை உப்புமாவை பேன்(ban) செய்யுங்கள் என்று புலம்ப வேண்டியது தான். சரியான பதத்தில் உதிரி உதிரியான சுவையான ரவை உப்புமா எப்படி கிண்டுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ரெண்டு கப், தண்ணீர் – இரண்டரை கப், நெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ரவை உப்புமா செய்முறை விளக்கம்:
ரெண்டு கப் ரவைக்கு 2½ கப் தண்ணீர் அதாவது ஒரு கப் ரவைக்கு 11/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். அப்போது தான் ரவை உதிரி உதிரியாக வரும். இதை செய்வதற்கென்றே ஒரு முறை உண்டு. ரொம்பவும் சுலபம் தான், முதலில் இரண்டு கப் அளவிற்கு ரவையை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். ரவையை வறுக்கும் பொழுது அடுப்பு குறைந்த தீயிலேயே இருக்க வேண்டும். ரவை நன்கு வறுபட்டதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலையை நறுக்கி சேருங்கள். சிலர் பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாய் சேர்ப்பது உண்டு. காய்ந்த மிளகாய் சேர்த்தால் ஒரு இடத்தில் மட்டும் காரம் இருக்கும், பச்சை மிளகாய் சேர்த்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

- Advertisement -

பிறகு நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை உதிர்த்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு நன்கு வதங்கியதும் தண்ணீரை இரண்டரை கப் அளவிற்கு வருமாறு சரியாக அளந்து சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடுங்கள். நீங்கள் ரவையை முழுவதுமாக சேர்ப்பதற்குள் எல்லா தண்ணீரையும் ரவை உறிந்து கொள்ளும்.

இதையும் படிக்கலாமே:
பீர்க்கங்காய் துவையலை வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எடை கூட சர சர வென்று குறைய ஆரம்பித்து விடும்.

பிறகு மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே மூடி விடுங்கள். பிறகு மூடியை திறந்து நன்கு கரண்டியால் அழுத்தம் கொடுத்து கிண்டி விடுங்கள். லேசாக அடிபாகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதை எல்லாம் நன்கு எடுத்து விடுங்கள். அதன் பிறகு மீண்டும் அடுப்பை மூடி ரெண்டு நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு ஒரு ஐந்து மூடியே வைத்திருங்கள். பின் திறந்து நன்கு கரண்டியால் அழுத்தம் கொடுத்து பிரட்டி விடுங்கள், அப்பொழுது தான் உதிரி உதிரியாக உப்புமா ரெசிபி சூப்பராக உதிர்ந்து வரும். கொஞ்சம் கூட அடியில் ஒட்டாமல் குழைந்து போகாமல் சரியான பதத்தில் ரவை உப்புமா நன்கு வெந்து வந்திருக்கும். இது போல செஞ்சு சாப்பிட்டு பாருங்க, இனி ரவை உப்புமாவை வேண்டாம் என்று சொல்லவே மாட்டீங்க.

- Advertisement -