பீர்க்கங்காய் துவையலை வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எடை கூட சர சர வென்று குறைய ஆரம்பித்து விடும்.

- Advertisement -

காய்கறிகள் என்றாலே உடலுக்கு நன்மை தரக் கூடியவை தான். அதிலும் பச்சை காய்கறிகளில் சத்துக்கள் சற்று கூடுதலாகவே நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இந்த பீர்க்கங்காயில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சனை குணமாக்கும். இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. இந்த பீர்க்கங்காயில் இன்னும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாகவே நீர் சத்து நிறைந்த காய்களை உணவில் எடுத்துக் கொள்ளும் போது நம் உடம்பில் உள்ள கொழுப்புகள் விரைவாக கரைந்து உடல் எடை குறையும். அந்த வகையில் நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உடல் எடை விரைவாக குறையும் வாய்ப்புகள் அதிகம் இந்த பீர்க்கங்காயில் உள்ள அதே சத்துக்கள் தான் அதன் தோலிலும் உள்ளது. அந்த தோலை வைத்து சுவையான துவையலை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய் – 2, சின்ன வெங்காயம் – 5, தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 2 பல், உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், உப்பு -1/4 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு -1/2 அரை டீஸ்பூன், புளி – சிறிதளவு, கருவேப்பிலை – 1 கொத்து.

- Advertisement -

பீர்க்கங்காய் தோல் துவையல் செய்வதற்கு முதலில் இரண்டு பீர்க்கங்காய் எடுத்து நன்றாக அலசி அதன் தோலை மட்டும் தனியாக சீவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து அதையும் தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நறுக்கி வைத்த பீர்க்கங்காய் தோலை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயத்தையும் தனியாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக அதில் தேங்காய் துருவலையும் புளியையும் சேர்த்து வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

வதக்கிய அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, தேங்காய், புளி, சேர்த்து ஒரு முறை அரைத்து விட்ட பிறகு வெங்காயம், வதக்கிய பீர்க்கங்காய் தோல் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.

- Advertisement -

கடைசியாக தாளிப்பதற்கு அடுப்பை பற்ற வைத்து சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்த உடன் கருவேப்பிலையும் சேர்த்து அடுப்பை அணைத்த பிறகு அதில் பெருங்காயம் சேர்த்து அந்த தாளிப்பை இந்தத் துவையலில் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மிக சுவையான பீர்க்கங்காய் துவையல் அருமையாக தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: மூன்று தலைமுறைக்கு பாட்டி ஆனாலும், மூட்டு வலியே வராது. வேர்க்கடலை சட்னியை இப்படி அரைத்து சாப்பிடுங்கள்.

இதை சுட, சுட சாதத்துடன் இந்த துவையலையும் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

- Advertisement -