அரைத்த மாவு காலியாகி விட்டதா? தோசை ஊத்த மாவு இல்லையா? ஒரு முறை இப்படி தோசை ஊத்தி பாருங்க. அப்புறம் வீட்ல எப்போதுமே தோசைக்காக மாவு அரைக்க மாட்டீங்க. எவ்வளவு செஞ்சாலும் பத்தவே பத்தாது.

dosai maavu
- Advertisement -

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை காலையில் என்ன டிபன் செய்வது? இரவில் என்ன டின்னர் செய்வது? என்றுதான். அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தமான வகையில் சுவையாகவும், அதே நேரம் தங்களின் நேரமும், வேலையும் மிச்சமாகும் படி என்ன இருக்கிறது என்று யோசிப்பார்கள். அப்படி அவர்களுடைய நேரத்தையும், வேலையும் மிச்சம் பண்ணும் வகையில் சுவையான ரவா தோசை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தோசை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விருப்பமான உணவாக விளங்குகிறது. தோசையில் பல எண்ணில் அடங்காத வகைகள் இருக்கின்றன. சாதா தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை, ரவா தோசை, ஊத்தப்பம் என்று நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதில் நாம் இன்று ரவா தோசை தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

ரவை – ஒரு கப், துருவிய தேங்காய் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு கப் ரவையை போட வேண்டும். ரவையை வருத்தும் போடலாம், வறுக்காமலும் போடலாம். பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். பிறகு அதில் உப்பு, மிளகு, சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் இவை நான்கையும் சேர்க்க வேண்டும். ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தேங்காயும், வெங்காயமும் தெரியாத அளவுக்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறிதளவு மிக்சி ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவி இந்த மாவுடன் சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். 20 நிமிடம் கழித்து அந்த மாவை நன்றாக கலந்து விட வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் நன்றாக காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் நாம் தயாரித்து வைத்திருக்கும் இந்த மாவை ஊற்ற வேண்டும்.

இந்த தோசையை கனமாகவும் ஊற்றலாம், மெல்லியதாகவும் ஊற்றலாம்.விருப்பமுள்ளவர்கள் அதன் மேல் கேரட் அல்லது பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளை தூவி விடலாம். ஒரு புறம் வெந்ததும் அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

- Advertisement -

இந்த தோசைக்கு நாம் எந்த சட்னியை வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளலாம். அதில் நாம் மிளகு, சீரகம், வெங்காயம் போட்டிருப்பதால் அதன் சுவையே அலாதியாக இருக்கும். எந்தவித சைடிஷும் இல்லாமல் அப்படியே கூட சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: இட்லி மீந்து போனால் வேஸ்ட் பண்ணாம இட்லி உப்புமா அல்ல இட்லி மஞ்சூரியன் டேஸ்ட்டியாக சுட சுட இப்படி கூட செய்யலாமே!

குறைந்த நேரத்தில் மாவை தயார் செய்து மிகவும் சுவையான ருசியான தோசையை செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாம். அவசர நேரத்தில் இந்த தோசை நம்மை காப்பாற்றும்.

- Advertisement -