கோவில் கருவறையில் யந்திர தகடு புதைக்கப்படுவது ஏன் ?

kovil
- Advertisement -

நம் முன்னோர்களின் அறிவியலுக்கு முன்னால் இக்கால அறிவியல் ஒன்றுமே கிடையாது என்று கூறினால் அது மிகையாகாது. அவர்களின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்போடு கவனித்தோமானால் அதில் அறிய பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பதை நாம் அறியலாம். அந்த வகையில் கருவறையில் ஏன் யந்திர தகடுகள் புதைத்துவைக்க படுகின்றன என்பதற்கான அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Yantram

கோவில்களில் ஓங்கி நிற்கும் கலசமானது நம் கண்களுக்கு புலப்படாத பல அறிய சக்திகளை கிரகித்து அதை நேரே கருவறைக்குள் செலுத்துகிறது. கருவறைக்குள் புதைத்து வைத்திருக்கும் யந்திரம் அதனை கிரகித்து கருவறை முழுக்க பரவச்செய்கிறது. இந்த நிகழ்வானது எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

- Advertisement -

நம் முன்னோர்கள் வகுத்த சரியான விதிப்படி கட்டப்பட்டுள்ள அனைத்து கோவில்களிலும் இந்த நிகழ்வானது நடக்கும். இதனாலேயே நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்கையில் நம்முள் இனம் புரியாத ஒருவித அமைதி நிலவுகிறது.

karuvarai

கருவறையில் இருந்து வெளிப்படும் அந்த நேர்மறை ஆற்றலானது கோவில் முழுக்க பரவி கிடைக்கும். ஆகையால் நாம் கோவிலை சுற்றி வரும் சமயத்திலும் இந்த நேர்மறை ஆற்றலானது நமக்கு கிடைக்கும். கோவிலை பல முறை சுற்றுவதன் மூலம் நமக்கு இறைவனிடம் இருந்து அருள் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இயற்கையிடம் இருந்து பலன் நிச்சயம் உண்டு.

- Advertisement -

kovil

இதையும் படிக்கலாமே:
பெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை

இதுபோல நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் பல விடயங்கள் கோவில்களில் புதைந்துள்ளது. கோவிலில் ஒலிக்கும் மணி, இறைவனுக்கு சூட்டப்படும் மலர், தீபாராதனை என அனைத்திலும் எத்தனையோ அறிவியல் பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஆகையால் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் கூட கோயிலிற்கு சென்றால் இயற்கையின் பலனை நிச்சயம் பெற முடியும்.

- Advertisement -