நிலம் வாங்கி வீடு கட்டும் எண்ணம் நிறைவேற நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட ஒரு சின்ன பரிகாரம்!

home temple

வாடகை வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் சொந்தமாக ஒரு சின்ன இடமாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த இடத்தில் எப்படியாவது, கடனை வாங்கியாவது வீடு கட்டி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். நியாயமான ஆசைதான். என்ன செய்வது நிறைவேற சற்று காலதாமதம் ஆகத்தான் செய்யும். விற்கும் விலைவாசிகள் அப்படி. நினைத்த உடன் நிலத்தையும், வீட்டையும் வாங்கிவிட முடியுமா? சற்று கடினமான விஷயம்தான். எப்படியாவது வீட்டை கட்டி விட வேண்டும் என்ற விடாமுயற்சியும், எண்ணமும், நம் கனவை நிச்சயமாக நிறைவேற்றி விடும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய முயற்சிகள், விரைவாக பலனளிக்க நம் முன்னோர்களால் கூறப்பட்ட இந்த சிறிய பரிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். விரைவில் வீடு கட்டுவதற்கான நல்ல வழி உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

new home

இதற்கு தேவையான பொருட்கள். தாமரை மணி மாலை 1, ஆறுமுக ருத்ராட்சம் 6, பச்சை கற்பூரம் சிறிதளவு, நன்னாரி வேர் பொடி சிறிதளவு. தாமரை மணி மாலையை எந்த எண்ணிக்கையில் வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு பெரிய தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு அதில் நன்னாரி வேர் பொடியை நன்றாக பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாகத் தாமரைமணி மாலையை வட்டமாக நன்னாரிவேர் பொடியில் வைத்து விடவும். மணி மாலைக்கு நடுவே பச்சை கற்பூரத்தை கொட்டி, அதில் ஆறு ருத்ராட்சத்தை வட்டமாக வைத்துவிட்டால் போதும். இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட இந்த தட்டை உங்களது வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து உங்கள் வீட்டில் ஒரு நல்ல ஈர்ப்பு தன்மையை உண்டாக்கிவிடும். எப்படியாவது வீடு கட்டிவிட வேண்டும் என்ற உங்களது எண்ணமும் இந்த பரிகாரமும் சேர்ந்து, நிலத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான வழியை கூடிய விரைவில் நிச்சயமாக உங்களுக்கு காட்டிவிடும். இந்த பரிகாரத்தின் மூலம் பல பேர் பயன் அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்களையெல்லாம் அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிலம், வாங்க வேண்டும். வீடு கட்ட வேண்டும், என்ற எண்ணம் நிறைவேறும் வரை இதை அப்படியே வைத்திருக்கலாம்.

vetrilai pakku

அடுத்ததாக இந்த பரிகாரத்தோடு சேர்த்து வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 2 வெற்றிலை, 2 பாக்கு, அதன்மேல் ஒரு ரூபாய் நாணயத்தை இறைவனிடம் வைத்து, தீபம் ஏற்றி வீடு கட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வாருங்கள். தொடர்ந்து 108 வாரம் இந்த வேண்டுதலை இறைவனிடம் வைத்து வந்தால் நிச்சயமாக உங்களது வீடுகட்டும் என்னமானது நிறைவேறும். வெற்றிலையை வாட விடக்கூடாது. முடிந்தால் சாப்பிட்டு விடலாம். இல்லையென்றால் பசுமாட்டிற்கு கொடுத்துவிடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வாரம்தோறும் சேமித்து வாருங்கள். நிச்சயமாக 108 வாரத்திற்குள் நல்ல செய்தி வந்து சேரும் என்பது உறுதி. 108 நாணயங்களை தர்ம காரியத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

முதல் பரிகாரம் நம்முடைய எண்ணங்களை அதிவிரைவாக செயல்படுத்தி வீடுகட்ட தேவையான வழிமுறைகளை பின்பற்ற நம்மை தூண்டும். இரண்டாவதாக கூறப்பட்டிருக்கும் பரிகாரம் இறைவனின் பாதங்களை சரணடைய. இறை வழிபாட்டுடன் செய்யக் கூடிய எந்த ஒரு பரிகாரமும் கூடிய விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
தங்கம் நிறைய வாங்கணும்! ஏமாறாமலும் வாங்கணும்! என்ன செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veedu katta pariharam in Tamil. Pudhu veedu Tamil. Sontha veedu amaiya. Sontha veedu katta Tamil. Sontha veedu vanga pariharam.