வீட்டில் கெட்ட அதிர்வுகள் நீங்க சாம்பிராணி தூபம் போட முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் இதுபோல் செய்து வைத்தால் அதற்கு இணையான பலனை கொடுக்குமே!

lakshmi-kalasam-sembu

எல்லோருடைய வீட்டிலும் நல்ல சக்திகளும், கெட்ட சக்திகளும் கலந்தே இருக்கும். அவ்வகையில் நாம் செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும். இதனால் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது, பூஜைகள் செய்வது, தூப, தீப, ஆரத்தி காண்பிப்பது, வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடுவது போன்ற விஷயங்களை நாம் கடைபிடித்து வரும் பொழுது தொடர்ந்து வீட்டில் நல்ல சக்திகள் அதிகரித்து வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீக்கும். அந்த வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் எப்பொழுதும் இருக்கும்.

pooja-items

ஆனால் இப்போதெல்லாம் யாரும் சாம்பிராணி புகையை போடுவதே கிடையாது. சாம்பிராணி புகை போடுவதற்கு நெருப்புத் தணல் மூட்டி அதில் நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். இதற்கெல்லாம் நேரம் இல்லாத காரணத்தால் இப்போதெல்லாம் யாரும் இதனை தினமும் அல்ல, அவ்வப்போதாவது கூட செய்வது இல்லை. இதனால் வீட்டில் நிறைய சண்டைகள், சச்சரவுகள் அதிகரிக்கும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவை உங்களால் எடுக்க முடியாமல் போகும்.

வீட்டில் நல்ல அதிர்வலைகள் இருந்தால் தான், அந்த வீட்டில் வசிக்கும் நபர்களுக்கும் நல்ல அதிர்வலைகள் நல்ல எண்ணங்கள் உருவாகும். எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரம் ஒரு முறையாவது சாம்பிராணி தூபம் போட பழகிக் கொள்வது நல்லது. சரி அப்படி சாம்பிராணி தூபம் போட எங்களுக்கு நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு வேறு மாற்று வழி எளிதாக செய்ய முடியும். இந்த வழியின் மூலம் சாம்பிராணி போட்டால் என்ன பலன்கள் கிடைக்குமோ! அதே அளவிற்கு பலன்களை நாம் பெறலாம். அத்தகைய வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sambrani

வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடும் பொழுது அதிலிருந்து வரும் அதிர்வலைகள் வீட்டில் எத்தகைய தீய சக்திகள் இருந்தாலும், அல்லது மற்றவர்களுடைய கண் திருஷ்டிகள் இருந்தாலும் அவைகள் முழுமையாக நீங்கிவிடும். அதே போல இந்த ஒரு விஷயத்தை நாம் செய்யும் பொழுதும் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் வெளியேறி வீடு முழுவதும் நல்ல தேவதைகள் குடியேறுவார்கள். மேலும் இறைவனுடைய அருளும் நமக்கு கிடைக்கும். வீடு தேடி மகாலட்சுமியே காலடி எடுத்து வைப்பாள். செல்வ வளம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒரு செம்பு, பித்தளை அல்லது வெள்ளி சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். தண்ணீர் விளிம்பு வரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் விளிம்புக்கு மேலே வரை வருமாறு சுத்தமான பன்னீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த பன்னீரில் 2 ஏலக்காய்களை போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை அளவிற்கு ஜவ்வாது பவுடர் சேர்த்து கொள்ளுங்கள். கலசத்திற்கு மஞ்சள், குங்குமம் விளிம்புகளில் நாற்புறமும் வைத்துக் கொள்ளுங்கள். கலசத்திற்கு சாமந்திப் பூவை வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அலங்காரம் செய்யுங்கள்.

sembu-sombu

பின்னர் வெள்ளிக்கிழமையில் பூஜைகள் செய்வதற்கு முன் வீட்டின் வெளிப்புற கதவிற்கு வலது பக்கத்தில் யாருடைய கால்களிலும் படாதவாறு வைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க! இதில் இருந்து வரும் வாசம் வீடு முழுவதையும் கோவிலாக மாற்றிவிடும். இந்த மணம் வீடு முழுவதும் பரவி நல்ல தேவதைகளையும், இஷ்ட தெய்வங்களையும் வீட்டிற்குள் எழுந்தருளச் செய்யும். அதன் பிறகு நீங்கள் பூஜை செய்யும் பொழுது அதனுடைய முழு பலன்களையும் உங்களுக்கு இறைவன் கொடுப்பார்.

இதையும் படிக்கலாமே

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.