ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கலக்கலான எக் ப்ரைட் ரைஸ் ரெசிபியை அதே சுவையில் வீட்ல ரொம்ப சுலபமா இப்படி செஞ்சு அசத்துங்க.

egg fried rice
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருமே ஹோட்டல் சாப்பாட்டிற்கு அடிமை என்றே சொல்லலாம். அதுவும் இப்போதெல்லாம் இந்த துரித உணவு கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என்றாலும் இதை விரும்பி உண்கிறார்கள். இது நிச்சயமாக நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

ஆரோக்கியமே இல்லாத இந்த பொருளை கடைகளில் வாங்கி உண்பதை காட்டிலும், அதே சுவையில் நாம் வீட்டில் செய்து கொடுத்தால் நன்றாக தானே இருக்கும். இதனால் ஓரளவிற்காவது நம்முடைய குழந்தைகளின் நலனின் அக்கறை கொண்டது போலவும் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஒரு சூப்பரான எக் ப்ரைட் ரைஸ் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

செய்முறை

இந்த பிரைட் ரைஸ் செய்ய முதலில் 200 கிராம் அளவு பாஸ்மதி ரைஸ் 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அதை உதிரியாக வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 10 பீன்ஸ், ஒரு கேரட், ஒருகுடைமிளகாய், ஒரு கைப்பிடி அளவு வரும் படி முட்டைகோஸ் எடுத்து அனைத்தையும் ஒரே அளவில் நறுக்கி இதையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பேன் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் ஐந்து முட்டையை உடைத்து ஊற்றுங்கள். இதில் கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து முட்டையை பொடி மாஸ் செய்வது போல செய்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். இது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து மீண்டும் இதே பேனை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்து 10 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து வெங்காயம் லேசாக வதங்கியதும் நறுக்கி வைத்த காய்கறிகளை இதில் சேர்த்து அடுப்பை ஹை ஃபிளேமில் வைத்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். இப்போது காய்கறிக்கு தேவையான அளவு கால் டீஸ்பூன் உப்பு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் 2 நிமிடம் வதங்கினாலே போதும். அதன் பிறகு வடித்து ஆற வைத்த சாதத்தை இத்துடன் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். அதன் பிறகு பொரித்து வைத்த முட்டையும் இதில் சேர்த்து மீண்டும் கொஞ்சமாக உப்பு ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து அடுப்பை ஹை ஃபிளேமில் வைத்து இரண்டு நிமிடம் வரை கலந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இட்லி பொடி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த ஒரு பொருளை அதனுடன் சேர்த்து செய்து பாருங்கள். அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த அற்புதமான இட்லி பொடி.

இந்த முறையில் செய்தால் ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் எக் ஃபிரைட் ரைஸ் கிடைப்பதுடன் நம் குழந்தைகளுக்கு நாமே வீட்டில் செய்து கொடுத்தது போல இருக்கும். இதில் தேவையில்லாமல் உடம்பை கெடுக்கக் கூடிய எந்த பொருட்களையும் சேர்க்காமலும் செய்யலாம்.நீங்களும் இது போல உங்க குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

- Advertisement -