நீங்கள் வேண்டாம் என்று தூக்கி போடும் இந்த 1 பொருள்! இந்த 3 விஷயத்திற்கு உபயோகமாகும் தெரியுமா?

kitchen-rice-bag
- Advertisement -

நம்முடைய வீட்டில் நாம் பயன்படுத்தி விட்டு வேண்டாம் என்று தூக்கி எறிய நிறைய பொருட்கள் உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருளையும் நாம் என்ன செய்வதென்றே தெரியாமல் குப்பையில் போட்டு விடுவது உண்டு. ஆனால் உண்மையில் நமக்கு வேண்டாத சில பொருட்கள் வேண்டிய பொருட்களாக மாற்றுவதில் நிறைய மெனக்கெட வேண்டியது அவசியமில்லை. அவ்வகையில் சுலபமான முறையில் இந்த பொருளை எப்படி ரீயூஸ் செய்யலாம்? அது என்ன பொருள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rice

நாம் சாப்பாடு சமைக்க பயன்படுத்தும் அரிசியை மொத்தமாக தான் எப்போதும் வாங்குவோம். கடைகளில் அதை லூசில் சில்லறை சில்லறையாக பெரும்பாலும் யாரும் வாங்குவதில்லை. 5 கிலோ, 10 கிலோ அல்லது 25 கிலோ என்று மூட்டையாக வாங்கி வைப்போம். இதில் துணி போன்ற பை உபயோகப்படும். அந்த அரிசி மூட்டையின் பையை நீங்கள் என்ன செய்வீர்கள்? அரிசி தீர்ந்தவுடன் அந்த பையை வைத்து என்ன செய்வது என்றே பலருக்கும் தெரியாது. பெரும்பாலும் அந்தப் பை வீணாகக் குப்பையில் தான் செல்லும். ஒன்றிரண்டு பைகளை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும் பெரும்பாலான பைகள் வீணாக தூக்கி எறியப்படுகின்றன. இவற்றை வைத்து எப்படி மறுசுழற்சி செய்யலாம்? என்பதற்கான டிப்ஸ் தான் இது.

- Advertisement -

டிப் 1:
அரிசிப் பையை தீர்ந்தவுடன் தூக்கி எறியாமல் அதனை அழகாக மடித்து சேகரித்து வையுங்கள். பின்னர் சேகரித்த பைகளில் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கிச்சன் அலமாரிகளில் நீங்கள் பொதுவாக நியூஸ் பேப்பரை போடுவது வழக்கமாக வைத்திருப்பீர்கள். ஆனால் நியூஸ் பேப்பரை விட அரிசி பை சிறந்த உபயோகமாக இருக்கும்.

rice-bag

அரிசிப் பையை ஓரங்களில் இருபுறமும் கத்தரித்துக் கொள்ளுங்கள். உட்பக்கமாக பிராண்ட் நேம் இல்லாமல் வெள்ளையாக இருக்கும் அல்லவா? அந்தப் பகுதியை உங்களுடைய கிச்சன் அலமாரியின் அளவிற்கு ஏற்ப சுற்றிலும் கத்தரித்து போட்டு வையுங்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பொருட்களை எடுக்கும் பொழுது கிழிந்து விடாமலும் சிறந்த உபயோகமாக நமக்கு நிச்சயமாக இருக்கும்.

- Advertisement -

டிப் 2:
இந்த அரிசிப் பைகளை கார்டனுக்கு (grow bag)குரோ பேக்காகவும் பயன்படுத்தலாம். அதாவது தோட்டத்தில் புதிய செடி போன்றவைகளை வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். அரிசிப் பையை உட்பக்கமாக திருப்பிக் கொண்டு மேல் பகுதியை சிறிதளவு உட்புறமாக மடித்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பையில் உங்களுக்கு தேவையான அளவிற்கு மண் கலவையை போட்டு பின்னர் நீங்கள் வளர்க்க விரும்பும் செடியின் விதையை ஊன்றி வைக்கலாம். காசு கொடுத்து வாங்குவதை காட்டிலும் இத்தகைய குரோ பேக் பார்ப்பதற்கும், செடிகள் விரிவாக வளர்வதற்கும் அழகாகவும், ஏதுவாக அமையும்.

plant-grow-bag

டிப் 3:
மூன்றாவதாக சமையலறையில் கேஸ் அடுப்பிற்கு கீழே அரிசி பையை இதே போல் கத்தரித்து போட்டு வைத்தால் கிச்சன் மேடை சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும். அடுப்பிலிருந்து சிந்தும் பொருட்கள் தரையை வீணடிக்காமல் இந்தப் பையில் படிந்து விடும். வாரம் ஒரு முறை இதனை மாற்றிக் கொள்ள விரும்பினால் தாராளமாக மாற்றி விடலாம். அரிசி பை மற்ற பொருட்களை விட தடிமனாக இருப்பதால் இது போன்ற பல வீட்டு உபயோகங்களுக்கு நாம் அழகாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

- Advertisement -

gas-stove

இவைகள் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய விஷயங்களை இதனை வைத்து நாம் செய்ய முடியும். இதை பற்றி மேலும் உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும், நீங்கள் வீட்டில் இவற்றை வைத்து செய்யும் விஷயங்களையும் பட்டியலிடுங்கள். உங்கள் மூலம் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு பூச்செடிகளில் இருக்கும் எப்படிப்பட்ட பூச்சிகளையும் விரட்ட, காசு கொடுத்து செயற்கை மருந்து வாங்க வேண்டாம். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த இயற்கையான பொருட்கள் போதும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -