கபில் தேவ் இந்த ஒரு விடயத்திற்கு மிகப்பெரிய அடிமை அவரால் அது இல்லாமல் இருக்க முடியாது. அதை நான் அவரின் அருகில் இருந்து பார்த்துள்ளேன் – RJ பாலாஜி

Balaji

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்று அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ். இவரது தலைமையின் கீழ்தான் இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை வென்றது. அதன் பின்தான் இந்திய அணியின் தரம் உலக கிரிக்கெட் நாடுகளுக்கு இடையே பேசப்பட்டது.

Kapil

தற்போது கபில் தேவ்விடம் இருக்கும் ஒரு வினோதமான பழக்கம் ஒன்றினை தொலைக்காட்சியில் கூறினார் RJ பாலாஜி. பாலாஜி மற்றும் கபில் தேவ் ஆகியோர் ஒன்றாக கிரிக்கெட் கமென்டரி செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கபில் தேவுடன் நெருங்கி பழகிய பாலாஜி தற்போது கபில் தேவின் அந்த பழக்கத்தினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பாலாஜி கூறியதாவது : நான் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் எனக்கே சென்னையில் வெளியில் சென்றால் ரசிகர்கள் வருவார்களோ என்ற பயம் இருக்கும். ஆனால், கபில் தேவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர் சாதாரணமாக வெளியே செய்கிறார். நான் அவருடன் செல்லும்போது எத்தனை ரசிகர்கள் வந்து கப்பிலிடம் போட்டோ கேட்டாலும் அனைவரிடமும் சிரித்து பேசி மகிழ்ச்சியுடன் போஸ் தருகிறார்.

Kapil 1

மேலும், இதுபற்றி நான் கபில் தேவிடம் கேட்டேன். அதற்கு கபில் கூறிய பதில் : எனக்கு பிரபலமாக இருப்பது பிடிக்கும். என்னை சுற்றி எப்போதும் ரசிகர்கள் வருவதையே நான் விரும்புகிறேன். எனக்கு அவர்கள் கொடுக்கும் அன்பு மற்றும் நான் அவர்கள் அறியும் ஒரு முகமாக இருப்பதையும் நான் விரும்புகிறேன். என்னை சுற்றி இது போன்ற ஒரு சூழலுக்கு நான் அடிமை. எனவே, தான் எத்தனை பேர் வந்தாலும் நான் பொறுமையாக அவர்களிடம் பேசி புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளேன் என்று கபில் தேவ் தன்னிடம் கூறியதாக பாலாஜி கூறினார்.

இதையும் படிக்கலாமே :

நியூசிலாந்தில் இருந்து வந்தவுடன் தனது ஏஞ்சல் உடன் நடனமாடியதை பகிர்ந்த ஹிட்மேன் ரோஹித் – கியூட் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்