சப்பாத்தி, பூரி, இடியாப்பத்துக்கு தொட்டுக்கொள்ள இந்த ருசியான ரோட்டு கடை சால்னாவை இப்படி ஒரு முறை செய்து சுவைத்திடுங்கள்

- Advertisement -

வீட்டில் குழந்தைகளுக்கு என்னதான் விதவிதமாக சமைத்து கொடுத்தாலும் கடைகளில் இருக்கும் உணவுகளையே விருப்பமாக தேடித்தேடி வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு பெரும்பாலும் அனைவரும் விரும்புவது ரோட்டு கடைகளில் விற்கின்ற உணவுகளை தான். ஹோட்டல்களில் மிகவும் ரிச்சாக சமைத்துக் கொடுத்தாலும், கமகம வாசத்துடன் காரசாரமான உணவுகள் ரோடு கடைகளில் தான் கிடைக்கும். அப்படி ரோட்டு கடைகளில் பரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவின் சுவை எவ்வளவு முயற்சி செய்தாலும் நமது வீடுகளில் வைக்கும் சால்னாவில் வருவதில்லை. இந்த பதிவில் அந்த சுவையான ரோட்டு கடை சால்னாவை எப்படி அதே சுவையில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

masala-poori1

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் _ 1, தக்காளி _ 2, பிரியாணி இலை – 4, கிராம்பு – 6, பட்டை சிறிய துண்டு – 2, ஏலக்காய் – 5, சோம்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் _ அரை ஸ்பூன், பூண்டு _ 6 பல், சின்ன வெங்காயம் _ 4, இஞ்சி சிறிய துண்டு – 1, தேங்காய் – 5, முந்திரி – 6, கசகசா – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பிரியாணி இலை, 4 கிராம்பு, ஒரு துண்டு பட்டை, 3 ஏலக்காய், அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், 6 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி மற்றும் சின்ன வெங்காயம் அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

kola

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, 5 ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொண்டு, பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கைப்பிடி புதினா இலைகள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 5 சில்லு தேங்காயை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு, அதனுடன் முந்திரி, கசகசா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

salna2

பின்னர் இதனையும் கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு ஒரு கொதி வந்ததும் ஒரு கைப்பிடி புதினா இலைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ரோட்டு கடை சால்னா தயாராகிவிட்டது. இது இட்லி, பூரி, தோசை, சப்பாத்தி என அனைத்துவிதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -