ரோட்டோர கடைகளில் காளான் மசாலா வாங்கி சாப்பிடுவீர்களா? இதை வீட்டிலேயே ரொம்ப சுலபமாக எப்படி செய்வது என்று தெரியுமா? சுவையான ரோட்டு கடை காளான் மசாலா எளிதாக செய்யும் முறை என்ன?

- Advertisement -

ரோட்டு கடை ஓரங்களில் விற்கப்படும் காளான் மசாலா பொதுவாக காளான் போட்டு செய்யப்படுவது கிடையாது! இதில் சேர்க்கப்படும் மிக முக்கியமான இன்கிரிடியன்ட் முட்டைகோஸ் ஆகும். முட்டைகோஸ் பொரித்து எடுத்து மசாலாவுடன் சேர்த்து செய்யப்படும் பொழுது சுவை அப்படியே காளான் போல இருக்கும். இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ரொம்ப சுலபமாக எப்படி நாம் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காளான் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – கால் கிலோ, மைதா மாவு – அரை கப், சோள மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – தேவையான அளவு. மசாலா செய்ய: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி சாஸ் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீர் – அரை கப்.

- Advertisement -

காளான் மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் காளான் மசாலா செய்ய கால் கிலோ அளவிற்கு முட்டைகோசை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம் அதுவே நீர் விட ஆரம்பிக்கும். இந்த கலவையை இப்போது எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

அதற்கு தேவையான அளவிற்கு எண்ணெயை காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மசாலா கலவை செய்ய வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் லேசாக வதங்கி வரும் பொழுது ஒரு கொத்து கருவேப்பிலை, ஒன்றரை டேபிள் ஸ்பூன் டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

- Advertisement -

இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து இந்த மசாலாக்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல் உப்பு போட்டு லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்து வரும் பொழுது நீங்கள் பொரித்து எடுத்து வைத்துள்ள முட்டைக்கோசை சேர்த்து நன்கு திரண்டு வரும் வரை கிளறி விடுங்கள்.

நீரெல்லாம் வற்றி நன்கு திரண்டு கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து ஒரு பிளேட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதன் மீது பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் கான்பிளவர் சிப்ஸ், நறுக்கிய மல்லி தழை போன்றவற்றை தூவி பரிமாறி பாருங்கள், அப்படியே ரோட்டு கடை காளான் மசாலா போலவே சுவையாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

- Advertisement -