நியூஸி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இரட்டைசதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் – சாதனை உறுதி

rohith
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி நாளை (30-01-2019) நடைபெற உள்ளது.

ms-vk

இந்த போட்டியில் கோலிக்கு பதிலாக இந்திய அணியில் முதல்முறையாக விளையாட உள்ளார் இளம் வீரர் கில். தோனி விளையாடுவாரா? இல்லையா ? என்பது நாளை காலையே தெரியவரும். நாளைய போட்டிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார்.

- Advertisement -

நாளைய போட்டி ரோஹித் சர்மாவிற்கு 200ஆவது ஒருநாள் போட்டியாகும். இதுவரை அவர் 199 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7799 ரன்களை அடித்துள்ளார். இதில் 22 சதங்களும் 39 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 264 ரன்கள் அடித்துள்ளார். ஆகையால், நாளைய ஒருநாள் போட்டி 200ஆவது ஒருநாள் என்ற இரட்டைச்சத சாதனையை நிகழ்த்த உள்ளார்.

rohith

இதன்மூலம் 200 போட்டிகளில் பங்கேற்ற 14ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அடைய உள்ளார். இப்போது இருக்கும் இந்திய அணியில் தோனி மற்றும் கோலி 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

கோலி இல்லாத நிலையில், தோனியும் அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் – என தகவல்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -