பூக்காத மல்லி செடியும் கொத்துக் கொத்தாக பூக்க, மாதம் ஒரு முறை இந்த உரத்தை கொடுத்தால் போதும். ஒரே செடியில் இவ்வளவு பூ பூக்கும்ன்னு தெரிஞ்சா உங்க தோட்டம் முழுவதும் இனி மல்லி செடியை தான் வளர்ப்பீங்க.

jasmine plant
- Advertisement -

வீட்டில் தோட்டம் அல்லது செடி வைக்க வேண்டும் என முடிவு செய்தாலே முதலில் நாம் தேர்ந்தெடுப்பது பூச்செடிகள் தான். இதில் ரோஜா செடிக்கு எந்த அளவிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை மல்லி செடிக்கும் கொடுப்போம். இந்த மல்லி செடி தொடர்ந்து பூத்து குலுங்க எந்த மாதிரியான உரத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களைப் பொறுத்த வரையில் எப்போதும் பூக்களுக்கும், பூச்செடிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே தான் அவர்கள் தோட்டம் என முடிவு செய்த உடனே முதலில் பூச்செடிகளை வாங்கி வளர்க்க விருப்பப்படுவார்கள். அப்படி வாங்கி வளர்க்கும் செடிகள் நல்ல முறையில் பூத்தால் தானே அந்த செடி வளர்ப்பதில் அர்த்தம் இருக்கும். இந்த முறையில் உரத்தை கொடுக்கும் போது நிச்சயமாக செடியில் எப்போதும் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

- Advertisement -

மல்லி பூ செடியை பொறுத்த வரையில் நல்ல வெயில் படும் இடத்தில் வைத்து தான் வளர்க்க வேண்டும். அடுத்ததாக அது பூ பூக்கும் காலம் முடிந்த பிறகு அதை கட்டாயமாக க்ரோனிங் செய்து விட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே அடுத்த முறை அது அதிக பூக்கள் பூக்கும்.

அதே போல் மல்லி செடியை வைக்கும் போதே கண்டிப்பாக மண்ணுடன் கம்போஸ்ட் கலந்து நட வேண்டும். வெறும் மணல் மட்டும் சேர்த்து செடி வைக்கும் போது அதில் பூக்கள் பூக்காது. அதே போல் இதற்கு மாலையில் தண்ணீர் ஊற்றாமல் முடிந்த வரையில் காலையில் ஊற்றி வருவது நல்லது. மாலையில் செடியில் பூக்கள் மலர துவங்கும். இந்த நேரத்தில் தண்ணீர் ஊற்றும் போது பூக்கள் சின்ன சின்னதாக பூக்கும். காலையிலே நாம் தண்ணீர் ஊற்றி விட்டால் மாலையில் பூக்கும் பூக்கள் நல்ல பெரிதாக பூக்கும். இதை நீங்க கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

அடுத்து இதற்கு உரமாக கடலை புண்ணாக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. ஒரே ஒரு மல்லி செடி வைத்திருக்கிறீர்கள் என்றால் ஒரு துண்டு கடலை புண்ணாக்கை தண்ணீரில் இரவு ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் அந்தத் தண்ணீருக்கு ஐந்து மடங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றி வரும் போது நல்ல சத்து கிடைத்து பூக்கள் நல்ல முறையில் பூக்கும். இதை அடிக்கடியும் ஊற்றக் கூடாது மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஊற்றினால் போதும்.

அடுத்து இப்போது நாம் செடிக்கு கொடுக்க வேண்டிய அந்த முக்கியமான உரத்தை பற்றி பார்ப்போம். அது வேறொன்றுமில்லை படிகாரம் தான். மல்லி செடியை பொறுத்த வரையில் அதற்கு கொஞ்சம் அமிலத் தன்மை தேவைப்படும். படிகாரத்தை நல்ல பொடி செய்து ஒரு ரோஜா செடி தொட்டிக்கு ஒரே ஒரு ஸ்பூன் அளவு படிகார தூளை எடுத்து கொஞ்சமாக மண்ணைத் தோண்டி அதில் போட்டு மூடி விடுங்கள். அப்படி போட முடியாதவர்கள் படிகாரத்தோடு தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றியும் வரலாம்.

- Advertisement -

அதே நேரத்தில் அதிகம் கொடுத்து விட்டால் செடியில் காரத் தன்மை அதிகரித்து பூக்கள் பூக்காது இது கவனமாக கொடுக்க வேண்டும். இதே படிகாரத்தை தண்ணீரில் கலந்தும் மல்லி செடிகளுக்கு கொடுத்து வரலாம். இதை மாதம் ஒரு முறை மட்டும் கொடுத்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: 5 ரூபாய்க்கு இத வாங்குனா போதும் உங்க வீட்டு பூக்காத ரோஜா செடியும் கொத்து கொத்தா இனி பூக்குமே!

இந்த சின்ன சின்ன வழிமுறைகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டால், செடி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அனைவருமே சுலபமாகவே செடிகளை வளர்த்து விடலாம்.

- Advertisement -