செலவே இல்லாத இந்த இரண்டு உரக்கரைச்சலை உங்க ரோஜா செடிக்கு கொடுத்து பாருங்க. இந்த வெயில் காலத்துல கூட உங்க ரோஜா செடி மட்டும் எப்படி இவ்வளவு பூ வைக்கிதுன்னு எல்லோருமே ஆச்சரியமா கேட்பாங்க.

rose plant in summer
- Advertisement -

ரோஜா செடிகளை வெயில் காலத்தில் பராமரிப்பது ரொம்பவே சிரமமான காரியம். இந்த காலத்தில் செடிகள் வாடி வதங்கி மொட்டுக்கள் கருகி ஏன் சில நேரங்களில் செடிகளே பட்டு போய் விடக் கூடிய வாய்ப்பு அதிகம். அதுவும் இல்லாமல் ரோஜா செடியை பொறுத்த வரையில் நம்முடைய சீதோசன நிலைக்கு ஏற்றபடி உள்ள செடிகள் மட்டும் தான் வெயில் காலத்தில் நன்றாக இருக்கும். மற்ற ரக செடிகள் நிச்சயமாக பாதிக்கும்.

இப்போது இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் எந்த வகையான ரோஜா செடியாக இருந்தாலும் வெயில் காலத்தில் அது வாடாமல் நன்றாக செழித்து வளரவும், புதிய மொட்டுக்கள் தளிர்கள் எல்லாம் வைத்து பூத்து குலுங்குவதற்கான ஒரு எளிமையான செலவில்லாத உரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ரோஜா செடி அதிக மொட்டுக்கள் வைக்க உரக் கரைசல்:
பொதுவாக ரோஜா செடிகள் வெயில் காலத்தில் இப்படி வாடுவதற்கு காரணம் அந்தச் செடிக்கு போதுமான அளவு பொட்டாசியம் ஹைட்ரஜன் சத்துக்கள் கிடைக்காதே. இந்த இரண்டு சத்துக்களும் செடி நன்றாக தழைத்து வளரவும், வேர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் இருக்க உதவி செய்யும். இப்போது இந்த இரண்டு சத்துக்களும் தரக் கூடிய கரைசலை தான் நாம் தயாரிக்க போகிறோம்.

முதலில் ஒரு ஐந்து வாழைப்பழ தோலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சின்ன சின்னதாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இது இரண்டு நாள் வரை அப்படியே இருக்கும். மூடாமல் வைத்தால் பூச்சிகள் கொசுக்கள் வந்து முட்டைகள் வைத்து விடும். அந்த தண்ணீரை நாம் செடிக்கு ஊற்றும் போது செடிகள் பாதிக்கும்.

- Advertisement -

இரண்டு நாள் கழித்து இந்த தண்ணீரை மட்டும் தனியாக வடித்து எடுத்து மூடி வைத்து விடுங்கள். இதில் இருக்கும் வாழைப்பழத் தோலை கீழே தூக்கி போடாமல் செடிகளுக்கு உரமாக போட்டு விடலாம். இப்போது சமையலுக்கு பயன்படுத்தும் மீல்மேக்கர் ஒரு கையளவு எடுத்து அதை தண்ணீரில் இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை நன்றாக பிழிந்து எடுத்து அந்த தண்ணீரை ஏற்கனவே எடுத்து வைத்த வாழைப்பழத் தண்ணீரில் சேர்த்து கலந்து விடுங்கள்.

இந்த மீல் மேக்கரை கூட வீணாக்காமல் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வாழைப்பழத் தோல் தண்ணீர், மீல் மேக்கர் ஊற வைத்த தண்ணீர் இது இரண்டும் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதை அளவு சாதாரண தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பிறகு, இந்த தண்ணீரை ரோஜா செடியின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணை லேசாக கிளறி விட்டு ஊற்றி விட்டால் போதும்.

- Advertisement -

வாழைப்பழத் தோலில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளது. மீல் மேக்கரில் நைட்ரஜன் சத்து அதிகமாக உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக கலந்து செடிகளுக்கு கொடுக்கும் போது செடிகள் நன்றாக செழித்து வளர்ந்து அதிகமான மொட்டுக்கள், தளிர்கள் வைத்து பூத்துக் குலுங்கும்.

இதையும் படிக்கலாமே: வீணாக கீழே தூக்கிப் போடும் இந்த பொருள் இருந்தா போதும் அதை வைத்தே உங்க ரோஜா செடியில் ஒரு இலை கூட வாடாம கொத்துக் கொத்தாக பூக்களை பூக்க வைத்து விடலாம்.

செலவில்லாத இந்த இயற்கையான உரக்கரைசலை தயாரித்து நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு இந்த வெயில் காலத்தில் பூக்கள் பூக்கும்.

- Advertisement -