பூச்சிகள் தாக்கும் ரோஜா செடிக்கு பூண்டு பற்கள் போதுமா? சமையல் கட்டில் இருக்கும் இந்த 2 பொருள் பூச்சிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும்!

rose-plant-insects-garlic
- Advertisement -

நாம் ஆசை ஆசையாக வளர்த்து வந்த ரோஜா செடியில் திடீரென பார்த்தால் எங்கிருந்து தான் வந்தது என்று தெரியாது, பூச்சிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும். பூச்சிகள் இலைகளை அரித்து பூக்களை பூக்க விடாமல் தடுத்துவிடும். மேலும் செடியை கூட நாசமாக்கி விடக் கூடிய அபாயம் உண்டு. இத்தகைய பூச்சிகளை விரட்டி அடிக்க வீட்டிலேயே எளிதாக செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பயனுள்ள தோட்டக்குறிப்பு பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக ரோஜா செடிகளை பூச்சி தாக்கிய உடன் முதலில் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. கிளைகளை மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளில் இருக்கக்கூடிய இலைகளை கத்தரிக்கோலால் வெட்டி விட வேண்டும். ஒருமுறை தாக்கப்பட்ட இலைகள் மீண்டும் சரி ஆகாது எனவே புதிதாக இலைகள் துளிர்க்க பூச்சிகளால் அரிக்கப்பட்ட இலைகளை முதலில் வெட்டி விடுங்கள். பூச்சிகள் இருந்தால் அதை கைகளால் எடுத்து தூக்கி எறியுங்கள்.

- Advertisement -

மண்ணின் ஈரப்பதத்தை காலையில் ஊற்றினால் மாலையில் காய்ந்து போகும் படி செய்யுங்கள். மாலையில் தான் அதிக பூச்சி தொந்தரவுகள் வரக்கூடும். தண்ணீர் தேக்கம் அதிகமாக இருக்கக் கூடாது. மண்ணிற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைக்க மண் தளர்வாக இருக்க வேண்டும். இதனை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பூச்சி தொந்தரவுகளை விரட்டி அடிக்க பூண்டு ஒரு மிகச்சிறந்த பூச்சிக் கொல்லியாக இருக்கிறது. சிறிதளவு பூண்டை அரைத்து அதனுடன் மிளகையும் சேர்த்து போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் சாற்றை பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டி அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பூச்சிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும் பொழுது இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்தி, நீங்கள் எளிதாக ரோஜா செடியை பாதுகாக்க முடியும்.

- Advertisement -

அதிக அளவு பூச்சி தொந்தரவு இல்லை என்றால் ஆங்காங்கே பூண்டுகளை சொருகி விடுங்கள். மண்ணில் இப்படி சொருகி விடுவதால் பறக்கும் பூச்சிகள் முதல் இலைகளை தின்னும் பூச்சி வரை அனைத்தும் செடியின் அருகே நெருங்காமல் இருக்கும். மேலும் எறும்பு தொந்தரவுகளும் குறையும். பூச்சிகள், எறும்புகள் தொந்தரவிலிருந்து விடுபட சிறிதளவு பட்டையை பொடித்து பூண்டு சாறுடன் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து பின்னர் வேரை சுற்றிலும் தெளித்து விடலாம். ரோஜா செடி முழுக்கவும் கூட நீங்கள் இது போல தெளித்து விடுவதால் பூச்சிகள் தொந்தரவை எளிதாக விரட்டி அடிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
செலவே இல்லாத இந்த இரண்டு உரக்கரைச்சலை உங்க ரோஜா செடிக்கு கொடுத்து பாருங்க. இந்த வெயில் காலத்துல கூட உங்க ரோஜா செடி மட்டும் எப்படி இவ்வளவு பூ வைக்கிதுன்னு எல்லோருமே ஆச்சரியமா கேட்பாங்க.

பொதுவாக எல்லா வகையான பூச்செடிகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தாக செயல்படுவது வேப்ப எண்ணெய். சிறிதளவு வேப்ப எண்ணெய்யுடன் இரண்டு சொட்டு ஷாம்பு கலந்து, பூண்டு சாறு ரெண்டு ஸ்பூன் விட்டு நன்கு கலந்து வைத்துக் கொண்டால் மிகச் சிறந்த பூச்சிக்கொல்லி மருந்தாக இது செயல்படும். இது ரோஜா செடிக்கு மட்டுமல்ல, எல்லா வகையான பூச்செடிகளுக்கும் கூட தெளிப்பதால் பூச்சி தொந்தரவுகள் ரொம்ப சுலபமாக கட்டுப்படும். இதற்காக அதிக அளவு செலவு செய்து செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை! வீட்டில் இருக்கும் பூண்டு போதும் பூச்சிகளை விரட்டி அடிக்க!

- Advertisement -