அட இந்த ஒரு ரோஸ் வாட்டர் மட்டும் இருந்தா போதுமா? அத்தனை அழகு குறிப்புகள் இதை வைச்சு மட்டும் செய்யலாமா? இத்தனை இது தெரியாம போச்சே.

- Advertisement -

ஒரே ஒரு ரோஸ் வாட்டர் பாட்டில் வீட்டில் இருந்தால் போதும் அழகு சார்ந்த குறிப்புகளுக்கும் இந்த ஒரு ரோஸ் வாட்டர் பாட்டில் பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த பதிவை படித்த பிறகு கட்டாயமாக உங்களுக்கு இந்த ரோஸ் வாட்டர் வைத்து எத்தனை அழகு குறிப்புகள் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்குவதற்கு இந்த ரோஸ் வாட்டர் ஒன்றே போதும். இதற்காக வேறு எந்த செலவும் மெனக்கெட்டு செய்ய வேண்டியதில்லை. ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, அதை அவ்வப்போது உங்கள் முகத்தில் ஸ்பிரே செய்து ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்தாலே போதும்.

- Advertisement -

முகம் எப்போதும் ஃப்ரெஷ்ஷா ஆக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு காட்டன் வைத்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து விடுங்கள். இரவு முழுவதும் உங்கள் முகத்தில் இது அப்படியே இருக்கட்டும் மறுநாள் காலை முகத்தை கழுவினால் உங்கள் முகம் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

அதே போல் நீங்கள் முகத்திற்கு இதை ஒரு ஃபேஸ் பேக்காகவும் போடலாம். பைத்த மாவு ஒரு ஸ்பூன், ரோஜா இதழ் பொடி ஒரு ஸ்பூன், இதை கலக்க ரோஸ் வாட்டர் மூன்றையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை அலம்பினால் போதும். உங்கள் முகம் மாசு மாறு இன்றி அத்தனை அழகாக இருக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும்.

- Advertisement -

முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க காலை, இரவு இரண்டு வேளையும் ரோஸ் வாட்டரை உங்கள் முகத்தில் அப்ளை செய்து வந்தாலே போதும். முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும். ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிராம்புத்தூள் ஒரு ஸ்பூன், இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களின் மேல் இரவு தூங்கும் முன் வைத்து விடுங்கள். இரவு அப்படியே இருக்கட்டும் அடுத்த நாள் காலை முகத்தை கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் சரியாகி விடும்.

இந்த ரோஸ் வாட்டர் மேக்கப் போடுவதற்கு மட்டுமல்லாமல் போட்ட மேக்கப் ரிமூவ் செய்வதற்கும் இந்த ரோஸ் வாட்டர் உபயோகிக்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து உங்கள் மேக்கப் போட்டு முகத்தில் மீது தடவி அதன் பிறகு சுத்தம் செய்தால் போட்டு மேக் அப் விரைவில் அழிவதுடன் முகத்திற்கு ஒரு மிருதுவான தன்மை யும் கிடைக்கும்

- Advertisement -

அதே போல் ரோஸ் வாட்டர் உடன் இரண்டு கற்பூரத்தை தூள் செய்து போட்டு அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் ஒரு காட்டன் துணி வைத்து ஒற்றி எடுத்த பிறகு துடைத்தாலே போதும் எண்ணெய் வடிவது பெரும் அளவில் குறைந்து விடும்.

அதே போல் நீராவி பிடிக்கும் போது நம் சருமத்தில் உள்ள துளைகள் எல்லாம் திறந்து அழுக்குகள் வெளியேறும். அந்த நீரிலும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டால் உங்கள் முகத்தின் நிறமும் அதிகமாகும். அது மட்டுமில்லாமல் முகம் எப்போது புத்துணர்வுடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 1000 வாட்ஸ் பல்ப் மாதிரி உங்களுடைய முகத்தை பிரகாசமாக மாற்ற வெறும் 1 நிமிடமும், இந்த 1 சோப்பு இருந்தால் போதும்.

ஒரு பாட்டில் ரோஸ் வாட்டர் இருந்தா அதை வைத்து இத்தனை அழகு குறிப்பு செய்து விடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -