ரோட்டுக்கடை தண்ணி கார சட்னி ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. இதன் சுவைக்கு வாயடைத்துப் போவீங்க.

kara-chutney
- Advertisement -

சில இடங்களில் ரோட்டு கடைகளில் தண்ணி காரச் சட்னி கிடைக்கும். இட்லிக்கு தொட்டுக்கொள்ள அது அவ்வளவு ருசியாக இருக்கும். நம்முடைய வீட்டில் வெங்காயம் தக்காளி சேர்த்து அந்த காரச் சட்னியை செய்தாலும், அந்த அளவிற்கு சுவையும் மணமும் கிடைக்காது. ஆனால் இந்த ரெசிபியின் படி ஒரு முறை உங்க வீட்ல இந்த சட்னியை அரைச்சு பாருங்க. ரோட்டுக் கடையில் கிடைக்கும் அதே சுவை உங்க வீட்லயும் வரும். நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் உளுந்து – 1  டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், இந்த இரண்டு பருப்புகளையும் போட்டு சிவக்க வறுக்க வேண்டும். இரண்டு பொருட்களும் பொன்னிறமாக வறுபட்ட பின்பு தான் தோல் உரித்த பூண்டு பல் – 10, வர மிளகாய் – 10, மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் ஓரளவுக்கு பொடியாக வெட்டியது – 2, இந்த பொருட்களை சேர்த்து வதக்கவேண்டும்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வரட்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய – 3 தக்காளி பழங்கள், தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை – 1 கொத்து, மல்லி தழை – 4 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி பழம் பாதி அளவு வதங்கினால் போதும். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

அதன் பின்பு மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வையுங்கள். 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.

- Advertisement -

வெங்காயம் பிரவுன் கலர் வரும் வரை வதக்கி, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இந்த தாளிப்பில் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து இந்த சட்னியை அப்படியே ஒரு இரண்டு கொதி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வையுங்கள். (இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் ஆகத்தான் இருக்க வேண்டும்.) அவ்வளவு தான். அடுப்பை அணைத்து விடுங்கள்.

காரசாரமான சூப்பர் சட்னி தயார். இந்த காரச் சட்னியை காலையில் செய்து வைத்தால் இரவு வரை நன்றாக இருக்கும். பிரிட்ஜில் வைக்க வேண்டாம். சுட சுட இட்லிக்கு மேல் இந்த சட்னியை வார்த்து அப்படியே சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்.

- Advertisement -