வெள்ளை கொண்டைக்கடலை இருந்தா சூப்பரான இந்த சைவ கோலா உருண்டை ரெசிப்பியை இன்னைக்கே செஞ்சு அசத்துங்க!

konda kadalai kola urundai
- Advertisement -

கோலா உருண்டை என்றதுமே நமக்கு ஞாபகத்திற்கு வருவது மட்டன் வைத்து செய்யப்படும் கோலா உருண்டை தான். இதே கோலா உருண்டையை அசைவத்திலும் பல வகையில் பல பொருட்களை வைத்து செய்யலாம். அந்த வகையில் இன்று வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து ஒரு அருமையான சைவ கோலா உருண்டை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை – 1 கப், தனியா தூள் – 1 டீஸ்பூன், தேங்காய் துருவியது -1/4 கப், சின்ன வெங்காயம் -10, பூண்டு -5 பல், இஞ்சி -1 துண்டு, பச்சை மிளகாய் – 4, பட்டை – 1, லவங்கம் – 1, ஏலக்காய் – 2, மிளகு -1/2 ஸ்பூன், சீரகம் -1/2 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், சோம்பு -1/2 ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி, புதினா கொத்தமல்லி தழை சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

இந்த கொண்டைக்கடலை கோலா உருண்டை செய்வதற்கு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை கொண்டைக்கடலையை 8 மணி நேரம் உங்களுக்கு ஊற வைக்க நேரமில்லை எனில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஹாட் பாக்சில் எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி ஒரு மணி நேரம் வைத்து விடுங்கள் கொண்டைக்கடலை நன்றாக ஊறி விடும்.

இப்போது மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கொண்டைக்கடலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, பட்டை, லவங்கம், ஏலக்காய் , பச்சை மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, கசகசா என அனைத்தையும் சேர்த்து முதலில் பல்ஸ் நூலில் விட்டு எடுங்கள். அதன் பிறகு எலுமிச்சை சாறு மட்டும் கலந்து தண்ணீர் ஊற்றாமல் மீண்டும் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு பௌலில் அரைத்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இத்துடன் உப்பு, தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை 15 நிமிடம் வரை ஃப்ரீசரில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் போல உருண்டை பிடிக்கும் பொழுது கெட்டியாகவும் உடையாமல் இருக்கும். 15 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளே இந்த 10 சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் நீங்களும் சமையல் கில்லாடி தான்! இது தெரிஞ்சா கருவேப்பிலை காம்பை கூட விட மாட்டீங்க!

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்த பிறகு கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்ட பிறகு இரண்டு நிமிடம் காத்திருந்து அதன் பிறகு வெந்து சிவந்தும் எடுத்து பரிமாறுங்கள். சுவையான இந்த கோலா உருண்டை ரெசிபியை நீங்களும் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.

- Advertisement -