இல்லத்தரசிகளே இந்த 10 சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் நீங்களும் சமையல் கில்லாடி தான்! இது தெரிஞ்சா கருவேப்பிலை காம்பை கூட விட மாட்டீங்க!

karuveppilai-vendaikkai
- Advertisement -

இல்லத்தரசிகள், சமையலில் அதிகம் விருப்பம் உள்ளவர்கள் சிறு சிறு குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் ரொம்பவும் உபயோகமாக இருக்கும். அந்த வகையில் சமையலில் சுவை கூடுவதற்கும், வேலையையும், நேரத்தையும் மிச்சமாக்குவதற்கும் இந்த சில குறிப்புகள் பயனுள்ளதாக அமையும் என்று நம்பப்படுகிறது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முத்தான 10 சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக இப்பதிவில்!

குறிப்பு 1:
கருவேப்பிலையை பயன்படுத்திவிட்டு அதன் காம்பை தூக்கி எறிந்து விடுகிறோம். அது போல கொத்தமல்லியையும் காய்ந்து போனால் தூக்கி போட்டு விடுகிறோம். இவற்றை நன்கு வெயிலில் போட்டு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் தனியா சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் காய வைத்த பொருட்களையும் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சாம்பார் செய்யும் கொஞ்சம் தூவி பாருங்கள் சுவை, மணம் ஆளை அள்ளும்.

- Advertisement -

குறிப்பு 2:
சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது அதில் கடைசியாக கொஞ்சம் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிண்டி விடுங்கள். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து பரிமாறுங்கள் சுவை வித்தியாசமாக ரொம்பவே அருமையாக இருக்கும்.

குறிப்பு 3:
கூட்டு, பொரித்த குழம்பு வைக்கும் பொழுது கடைசியாக சிறிதளவு மாங்காயை துருவி போட்டு பாருங்கள் டேஸ்ட் ஆஹா..என்று இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
பன்னீர் வாங்கி வைத்தால் அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் போட்டு ஃப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்களுக்கு கசப்பாகவோ அல்லது புளிப்பாகவோ மாறாமல் இது பாதுகாக்கும்.

குறிப்பு 5:
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
மறுநாள் சமையலுக்கு உரிய காய்கறிகளை வெட்டி ஏர் டைட் பாக்ஸில் வைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். இதனால் பிரச்சனை ஒன்றும் இல்லை, நேரம் அதிகம் மிச்சம் ஆகும். இதில் வெங்காயத்தை மட்டும் முன்னரே வெட்டி வைக்கக் கூடாது.

குறிப்பு 7:
வெண்டைக்காய் போட்டு குழம்பு, சாம்பார் போன்றவற்றை வைக்கும் பொழுது அது உடையாமல் இருக்க ரெண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை வெண்டைக்காய் வதக்கும் பொழுது சேர்த்து வதக்குங்கள்.

குறிப்பு 8:
ஏலக்காய் தூள் அரைக்கும் பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள் நைசாக அரைபடும்.

குறிப்பு 9:
சர்க்கரை, வெல்லம், ஸ்வீட் வகைகள் போன்றவை வீட்டில் இருந்தால் அதில் இரண்டு துண்டு கிராம்பை போட்டு வையுங்கள். எறும்பு அந்த பக்கம் எட்டி கூட பார்க்காது.

இதையும் படிக்கலாமே:
வெங்காயம் தக்காளி தேங்காய் எதையுமே சேர்க்காம சிம்பிளான இந்த பொரியல் ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இப்ப இருக்க விலைவாசியை சூப்பரா சமாளிச்சிடலாம்.

குறிப்பு 10:
பாதாமை தோல் உரிக்க சுடுதண்ணீர் கொஞ்சம் ஊற்றி ஒரு நிமிடம் ஊற வைத்தால் போதும், சுலபமாக உரிந்து வந்து விடும். இதற்காக இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -