மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் டீ, காபி குடித்து மட்டுமே இந்த சளித்தொல்லையிலிருந்து விடுபட முடியும்

tea2
- Advertisement -

மழை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இதற்காக மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரை வாங்க வேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது. முதலில் வீட்டு வைத்தியம் செய்து பார்த்து அதில் குணமடையவில்லை என்றபிறகு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையாக டீ, காபி வைத்துக் குடித்தாலே போதும். இந்த பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட முடியும். அப்படி சளி பிரச்சினையை முழுவதுமாக விரட்ட இந்த மசாலா டீ மற்றும் காபியை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cough1

மசாலா டீ:
முதலில் இரண்டு நபர்களுக்கு டீ போடுவதற்கு தேவையான மசாலாவை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக இரண்டு ஸ்பூன் தனியா, ஒரு ஏலக்காய், சிறிய துண்டு இஞ்சி, 15 மிளகு, சிறிதளவு புதினா இலை இவை அனைத்தையும் சிறிய உரலில் வைத்து பொடியாக நசுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் வைத்து அதில் பொடித்து வைத்துள்ள இந்த மசாலாக்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இவை சிறிது நேரம் கொதித்ததும் இவற்றுடன் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி காய்ச்சிய பாலில் சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்தால் தொண்டையில் இருக்கும் சளி அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். தூக்கம் நன்றாக வரும்.

tea-making2

மசாலா காஃபி:
4 ஸ்பூன் தனியா, இரண்டு துண்டு சுக்கு, 20 மிளகு இவை மூன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சுக்கை சிறிய உரலில் வைத்து நன்றாக தட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் அடுப்பின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அரைத்து வைத்த இந்த பவுடரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்த்துள்ள 4 டம்ளர் தண்ணீர் நன்றாக கொதித்து கொஞ்சம் சுண்ட ஆரம்பித்ததும் அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடித்தால் போதும். தொண்டையில் இருக்கும் சளி சட்டென்று கரைய ஆரம்பிக்கும். உடல் அசதி மறைந்து நல்ல தூக்கம் வரும். இந்த சுக்கு வரமல்லி காப்பியுடன் பால் சேர்த்து வேண்டுமானாலும் குடிக்கலாம் அல்லது அப்படியேவும் குடிக்கலாம்.

இப்படி மழை காலத்தில் அடிக்கடி சளி, இருமல் பிரச்சினை இருந்தது என்றால் காலையில் சுடுதண்ணீர் வைத்து அதில் கொஞ்சம் மிளகு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் கொஞ்சம் நாட்டுச்சக்கரை சேர்த்து வடிகட்டி குடித்தால் போதும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் சளி தானாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -