சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுடைய நிம்மதியை கெடுக்குமா? இதெல்லாம் அங்கே இருந்தால் உடனே தூக்கி போட்டு விடுங்க!

kitchen-ammi-broken
- Advertisement -

நம் வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், அன்னபூரணி ஆட்சி செய்யும் சமையல் அறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அறையில் நாம் வைத்திருக்க கூடிய பொருட்கள் பண வரவை அதிகரிக்க செய்யும். தன, தானியங்களை பெருகச் செய்யும். அதே போல சமையலறையில் நாம் வைத்திருக்கக் கூடிய இந்த சில பொருட்கள் பண வரவை தடை செய்து நம்முடைய நிம்மதியை கெடுத்து கொண்டிருக்கும் என்கிறது ஆன்மீகம்! அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சமையலறையில் துருப்பிடித்த இரும்பு பாத்திரங்கள் கண்டிப்பாக நாம் வைத்திருக்கக் கூடாது. இரும்பு தோசைக்கல், இரும்பு அறிவாள்மனை, இரும்பு கடாய்கள் போன்றவை ஆரம்பத்தில் உபயோகமாக இருந்தாலும், ஒரு சிலர் நான்ஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பொழுது அவற்றை புறக்கணித்து விடுவார்கள். இதனால் நாளடைவில் அதன் பின்புறம் அல்லது உட்பக்கமாக துரு கரைகள் பிடிக்க ஆரம்பித்துவிடும். சமையலறையில் துரு கரைகள் இருக்கும் பொருட்கள் இருந்தால் அங்கு பணவரவு தடைபடுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. சமையலறை மட்டுமல்ல எந்த அறையிலும் துருப்பிடித்த பொருட்கள் இருக்கக் கூடாது.

- Advertisement -

முக்கியமாக சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்து எண்ணெய் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை அப்புறப்படுத்தி விடுவது மிகவும் நல்லது. இரும்பு என்கிற உலோகம் எதிர்மறை ஆற்றலை வெளியிடக் கூடிய சக்தி படைத்துள்ளது எனவே அதிகமாக இரும்பு பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். இரும்பு பாத்திரங்கள் வைத்திருந்தால் அதை தினமும் உபயோகப்படுத்தும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இரும்பு சத்து நமக்கு உணவின் மூலம் கிடைத்து ஆரோக்கியம் வலுப்பெறும்.

உடைந்த கண்ணாடி பொருட்கள் பூஜை அறை மற்றும் சமயலறையில் கட்டாயம் இருக்கக் கூடாது. கண்ணாடி பொருட்கள் உடைந்தால் உடனே அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும். சமையலறையில் சிலர் ஓடாத கடிகாரங்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். சமையலறையில் ஓடாத கடிகாரங்கள் இருப்பது நல்ல சகுனம் அல்ல. கடிகாரங்கள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கடிகாரம் நின்றால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுக்கு குறைவிருக்காது.

- Advertisement -

எனவே நின்ற கடிகாரத்தை உடனே சரிபார்ப்பது நல்லது. அல்லது சமையலறையில் இருக்கும் நின்ற கடிகாரத்தை அப்புறப்படுத்துவது நல்லது. பழைய உடைந்த கண்ணாடி டம்ளர்கள், பாத்திரங்கள் போன்றவையும் வைத்துக் கொள்ளக் கூடாது. காது உடைந்த பாத்திரங்கள் பயன்படாத நிலையில் இருந்தால் அதனை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஓட்டை விழுந்த பாத்திரங்கள் நம் வீட்டில் வறுமையை உண்டாகும் என்பது நியதி. பாத்திரங்களில் ஓட்டை உண்டாகி அதிலிருந்து ஒழுகுவது போன்று இருந்தால் கண்டிப்பாக அந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

கனமான பொருட்களாக இருக்கும் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் போன்றவற்றை வடக்குத் திசையில் சமயலறையில் வைத்திருக்கக் கூடாது. அதனை சமையல் அறையில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் வேறு திசைகளில் அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். கனமான பொருட்கள் வடக்கில் இருந்தால் குடும்பத்தில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்பட்டு விடும். அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை வரும். எப்பொழுதும் சமையல் அறையில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது, ஈரமான துணிகளை இரவு நேரங்களில் போட்டு வைத்திருக்க கூடாது, எச்சில் பாத்திரங்களை கழுவி விட்டு தான் உறங்க வேண்டும். இப்படி சமையலறையை நீங்கள் பராமரித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதிக்கு குறையும் இருக்காது.

- Advertisement -