சமையலுக்கு பயனுள்ள எளிமையான சூப்பரான 10 குறிப்புகள்!

pakkoda-paruppu-podi
- Advertisement -

சமையல் செய்யும் பொழுது சிறு சிறு விஷயங்களை கற்று வைத்துக் கொண்டால் ரொம்பவே உபயோகமாக இருக்கும். அந்த வகையில் எளிதாக சமைத்து அசத்த கூடிய அட்டகாசமான 10 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

குறிப்பு 1:
கட்லெட் செய்ய ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கும் பொழுது அவை உதிராமல் இருப்பதற்கு, கொஞ்சம் மைதா மாவை அதனுடன் சேர்த்து கலந்து பிரட்டி பாருங்கள், பிறகு எண்ணெய்யில் போட்டால் உதிராமல் கருகாமல் கட்லெட் அழகாக பொரிந்து வரும்.

- Advertisement -

குறிப்பு 2:
பேக்கரியில் வெங்காய பக்கோடா வாங்குபவர்கள் அதில் இருக்கும் பெரிய துண்டுகளை தனியாக எடுத்து மதியம் சமைக்கும் பொழுது குழம்பில் போட்டு பாருங்கள், வித்தியாசமான பருப்பு உருண்டை குழம்பு தயார்!

குறிப்பு 3:
பீட்ரூட்டை நீங்கள் மற்ற காய்கறிகளுடன் சமைக்கும் பொழுது இதனுடைய நிறம் மற்ற காய்களிலும் ஒட்டிக் கொள்ளும். இதனை தவிர்க்க முதலில் பீட்ரூட்டை தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கிய பின்பு மற்ற காய்கறிகளுடன் சேர்த்து செய்யும் பொழுது இதன் நிறம் அதில் சேராது.

- Advertisement -

குறிப்பு 4:
பாசிப்பருப்பு பாயாசம் செய்யும் பொழுது கொஞ்சம் பச்சரிசியையும், தேங்காய் பாலையும் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

குறிப்பு 5:
சில்லி காலிஃப்ளவர் செய்ய வேண்டும் என்றால் முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்த பின்பு இட்லி பானையில் வைத்து ஆவியில் அவித்து எடுக்க வேண்டும். பின்பு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுத்தால் கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத சில்லி காலிஃப்ளவர் ரெடி!

- Advertisement -

குறிப்பு 6:
பருப்பு பொடி சாதம் விரும்பி சாப்பிடுபவர்கள் கொஞ்சம் பொட்டுக்கடலையுடன் 2 பல் பூண்டு, காய்ந்த மிளகாய் ஒன்று, கொஞ்சம் வறுத்த பாசிப் பயறு, தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பு 7:
மிருதுவான பன்னீர் தயாரிக்க ஒரு லிட்டர் பாலை நன்கு கொதிக்கவிட்டு காய்ச்சிய பிறகு அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் நன்கு சுத்தமான துணியில் இட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சப்பாத்தி கட்டையில் போட்டு தேய்த்து கட்டம் கட்டமாக வெட்டி வைத்துவிட்டால் மூன்று நாட்கள் வரை ஃப்ரீஸரில் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 8:
அவசர தேவைக்கு செய்யப்படும் சேமியா அல்லது மேக்ரோனி போன்ற டிபன் வகைகளை தயாரிக்கும் பொழுது உதிரி உதிரியாக ஒட்டாமல் வருவதற்கு முதலில் அதன் அளவை விட அதிகமான தண்ணீரில் கொஞ்சம் உப்பு கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்க வைத்து இவற்றை போட்டு முக்கால் பதம் வேக எடுத்து குளிர்ந்த நீரினால் அலசினால் உதிரிகளாக இல்லாமல் ஒட்டாமல் வரும்.

குறிப்பு 9:
அரிவாள்மனை, கத்தி, வாணலி போன்றவை இரும்பில் செய்ததாக இருந்தால் அதை நீங்கள் கழுவி வைத்த பிறகு ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில் துருப்பிடித்து விடும்.

குறிப்பு 10:
மைக்ரோ ஓவன் உபயோகிப்பவர்கள் அப்பளம் பொரிப்பது போல சுண்டைக்காய், கொத்தவரங்காய், மணத்தக்காளி, மோர் மிளகாய் ஆகிய பொருட்களையும் எண்ணெய் சேர்க்காமல் ஒரே நிமிடத்தில் பொரித்து எடுத்து விடலாம். நல்ல நிறத்துடன், சுவையுடன் இருக்கும்.

- Advertisement -