எந்தவொரு சமையல் பொருளும் வீணாகாமல் இருக்க இந்த 15 டிப்ஸை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

kitchen-hacks
- Advertisement -

நாம் சமைக்கும் உணவானது மட்டுமே நம் ஆரோக்கியத்தை அதிகமாக பலப்படுத்துகிறது. சமைக்கும் உணவு மட்டுமல்லாமல் சமையலுக்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களும் கூட பாதுகாப்பாக, ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியமாகும். சின்ன சின்ன உணவு விஷயங்களில் கூட நுணுக்கமான ரகசியங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் நாமும் ஆகலாம் கிச்சன் கில்லாடி! அப்படியான விஷயங்களில் குறிப்பிட்ட 15 விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

egg-white

Tip 1
முட்டை ஆம்லெட் செய்யும் பொழுது அதில் கொஞ்சம் பால் சேர்த்து ஆம்லெட் போட்டால் மிருதுவாக இருக்கும். ஒரு முட்டைக்கு ஒரு ஸ்பூன் சேர்த்தால் போதும்.

- Advertisement -

Tip 2
உடைத்த கடலையை நீண்ட நாட்கள் நமத்துப் போகாமல் வைத்திருக்க வாங்கியவுடன் மூன்று நிமிடம் லேசாக வெறும் வாணலியில் போட்டு வதக்கி பின்னர் ஸ்டோர் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் நமத்து போகாது.

udaicha-kadalai

Tip 3
அரிசி மற்றும் பருப்பு வகைகளை நீண்ட நாட்களுக்கு வண்டு தொல்லையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க அதை சேமிக்கும் கலனில் ஒரு துண்டு வசம்பு போட்டு பின் அதன் மேல் அரிசி மற்றும் பருப்புகளை போட்டு வைத்தால் போதும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் வண்டுகள் பிடிக்காது.

- Advertisement -

Tip 4
புளி தண்ணீர் விட்டது போல ஆகி விடுகிறது என்றால் புதிதாக புளி வாங்கும் சமயத்தில் சிறிதளவு கல் உப்பு போட்டு அதன் மீது புளியை வைத்து ஸ்டோர் செய்தால் நீண்ட நாட்களுக்கு ட்ரையாக இருக்கும்.

puli-tamarind

Tip 5
நீங்கள் தினமும் சாப்பாடு செய்ய பயன்படுத்தும் புழுங்கல் அரிசியில் எறும்பு, வண்டுகள் வராமல் இருக்க நான்கைந்து பிரிஞ்சி இலைகளை பொட்டு வையுங்கள்.

- Advertisement -

Tip 6
கருவாடு சமைப்பவர்கள் அதில் இருக்கும் உப்பு தன்மை நன்றாக குறைய 10 நிமிடத்திற்கு கொதிக்கும் சூடான தண்ணீரில் கருவாடு துண்டுகளை போட்டு ஊற வையுங்கள். அதன் பின் சமைத்தால் உப்பு சரியான இருக்கும்.

karuvadu

Tip 7
நெய் வாங்கி வைப்பவர்கள் அதை கெட்டியாமல் இருக்க ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து வையுங்கள். அதன் நிறமும், மணமும் கூட மாறாமல் நீண்ட நாட்களுக்கு அப்படியே ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

Tip 8
கல் உப்பு வாங்கி வைப்பவர்கள் அதை கட்டி தட்டாமல் பாதுகாக்க சிறிதளவு அரிசி சேர்த்து வைக்கலாம். ஒன்றோடு ஒன்று சேர்ந்து கட்டி தட்டாமல் நீண்ட நாட்களுக்கு உதிரியாகவே இருக்கும்.

chilli-powder4

Tip 9
மிளகாய் தூள் அரைக்க அல்லது சமையல் செய்ய பயன்படுத்தும் அதிகப்படியான பெருங்காயத்தை கட்டி தட்டாமல் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க பெருங்காயத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் காம்புடன் கூடிய ஒரு பச்சை மிளகாயை போட்டு வையுங்கள்.

Tip 10
கோதுமை மாவு, கடலை மாவு என்று எந்த வகையான மாவு பொருட்களும் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல், வண்டுகள் வராமல் இருக்க சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம்.

Tip 11
சப்பாத்தி மாவை பிசைந்து வைப்பவர்கள் அதை காய்ந்து போகாமல் இருக்க சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் மேல்புறமாக நன்கு தடவி அதன் பின் ஈரத்துணியை வைத்து மூடி வைத்தால் போதும் எவ்வளவு நேரமானாலும் காய்ந்து போகாமல் இருக்கும், சப்பாத்தியும் சாஃப்டாக வரும்.

Tip 12
வாழைக்காய் பஜ்ஜி செய்யும் பொழுது நிறம் மாறாமல் இருக்கவும், உப்பு பிடிக்கவும் வாழைக்காய்களை வெட்டிய பின்பு உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் பஜ்ஜி போட்டால் சூப்பராக வரும்.

raw-banana-vazhakkai

Tip 13
இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும் பொழுது பொதுவாக இஞ்சி தான் அதிகமாக சேர்ப்பார்கள். ஆனால் இஞ்சியை விட பூண்டை இரண்டு மடங்கு அதிகம் சேர்த்து பாருங்கள் உணவின் ருசி கூடும். நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமலிருக்க அதில் உப்பு கொஞ்சம் சேர்த்து கலந்து வையுங்கள்.

Tip 14
முட்டை வேக வைக்கும் பொழுது சிறிதளவு கல் உப்பு சேர்த்து வேக வைத்தால் முட்டை வெடிக்காமல் இருக்கும். குறைந்தது 15 லிருந்து 20 நிமிடம் வரை நெருப்பை மீடியமாக வைத்து வேக வைத்தால் சாஃப்டாக வெந்து வரும்.

idly-maavu

Tip 15
இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க அரைத்த மாவின் மீது ஒரு வெற்றிலையை கவிழ்த்துப் போட்டு வைத்தால் போதும் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

- Advertisement -