ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதன் மூலம் பொருளை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இப்படி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பலரும் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்பிற்கு ஏற்ற பணம் என்பது கிடைக்க வேண்டும். அப்படியே கிடைத்தாலும் அது நம்மிடம் நிலையாக நிலைத்திருக்க வேண்டும். இப்படி நிலையாக நிலைத்திருப்பதற்கும் நம் கையில் தங்குவதற்கும் எந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சம்பாரித்த பணமும் பொருளும் நிலைத்திருக்க
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பிற்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இப்பொழுதே கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சம்பாதித்து சேர்த்து வைப்போம். இப்படி சேர்த்து வைப்பதன் மூலம் பிற்காலத்தில் அவசரத்திற்கு பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை என்பது ஏற்படாமல் நம்மால் அந்த சூழ்நிலையை சமாளித்துக் கொள்ள முடியும். இது எத்தனை பேருக்கு சாத்தியமாக இருக்கிறது?
அனைவருமே பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இருந்தாலும் சேர்த்து வைத்த பணத்தை விட பல மடங்கு அதிக அளவில் வீண்விரயங்களோ, மருத்துவ செலவுகள் என்று ஏதாவது ஒன்று ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதனால் நாம் சம்பாதித்த பணமும் நம்மிடம் இருப்பதில்லை, சேமிக்கவும் முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு மாறாக வறுமையும் கடனும் கஷ்டமுமே அதிகரிக்கிறது.
ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் அதை ஒரு நாளில் காலி ஆகிவிட்டு ஒன்றும் இல்லாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு சூட்சுமான வழிமுறையை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த வழிமுறையை அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அப்படி செய்ததன் மூலமாகத்தான் தங்களுடைய பிற்கால சங்கதிகளுக்கும் சொத்தை சேர்த்து வைத்தார்கள்.
பொதுவாக யாராவது ஒருவருடைய பொருளோ பணமோ காணாமல் போய்விட்டால் நீ கஷ்டப்பட்டு சம்பாதித்தது உன்னை விட்டுப் போகாது உன்னிடம் வந்து விடும் என்று கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக யார் ஒருவர் தன்னுடைய உடலையும் மனதையும் வருத்தி ஒரு வேலையை செய்து அதன் மூலம் பணத்தை சம்பாதிக்கிறார்களோ அந்த பணமானது நம்மை விட்டு நீங்காது. இன்றைய காலத்தில் பலரும் அப்படி செய்யாமல் பிறரை ஏமாற்றிய சம்பாதிக்கிறார்கள். பிறரை ஏமாற்றி நாம் பெரும் பணமும் பொருளும் நமக்குப் பிறகு நம்முடைய சங்கதிகளுக்கு போய் சேராமல் போய்விடும் என்று கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கோவில்களுக்கு தானமாக தர வேண்டும். அதேசமயம் கஷ்டப்படுகின்ற ஏழை மக்களுக்கு தங்களால் முடிந்த தர்மத்தை செய்ய வேண்டும். இப்படி ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் நாம் பிறருக்கு தானமாக தரும்பொழுது நாம் தெரியாமல் செய்த பாவங்களும், கர்ம வினைகளும் நீங்குவதோடு நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைத்திருக்கும். அது நம்முடைய வம்சத்திற்கும் போய் சேரும்.
இதையும் படிக்கலாமே:கையில் கருப்பு கயிறு கட்டும் உண்மை காரணம்
தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும் என்று கூறுவார்கள். அதற்கு பதிலாக தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தானமாகவும் தர்மமாகவும் நாம் ஒவ்வொரு மாதமும் செய்தால் அந்த தானமும் தர்மமும் நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதோடு நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து நம்மை காப்பாற்றும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.