சண்டை சச்சரவு குறைய பரிகாரம்

family
- Advertisement -

எந்த வீட்டில் சண்டை சச்சரவு ஓயாமல் வந்து கொண்டே இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி கடாட்சம் தாங்காது. உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி முன்கோபம் வருமா. கணவன் மனைவிக்குள், வீட்டில் இருக்கும் மற்ற உறவுகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருமா. உங்களுடைய வீட்டில் எப்போது பார்த்தாலும் காரணமே இல்லாமல் சண்டை வந்தால் முதலில் அந்த சண்டைக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிங்கள்.

அந்த காரணத்தை கண்டுபிடித்து அதைப்பற்றி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி, சண்டைக்கு ஒரு முடிவு கட்டிடுங்க. வீட்டில் தயவு செய்து அடிக்கடி சண்டை போடாதீங்க. இது குடும்பத்திற்கு நல்லது அல்ல. இது தவிர இந்த சண்டை சச்சரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் ஆன்மீகம் பரிகாரம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்காக ஒரு சின்ன குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் கலச திரவியம், சந்தன கட்டை, பன்னீர். கலச திரவியம் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சந்தன கட்டையில் பன்னீர் ஊற்றி நன்றாக இழைக்க வேண்டும். அதில் கொஞ்சமாக இந்த கலச திரவியத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு திலகம் உங்களுக்கு கிடைத்திருக்கும்‌. குலதெய்வத்தை நன்றாக வேண்டிக் கொண்டு இதிலிருந்து கொஞ்சமாக எடுத்து உங்கள் நிலை வாசல் கதவில் ஒரு பொட்டு வையுங்க. அதன் பிறகு இதை உங்களுடைய கணவரின் நெற்றியில் வைக்கவும். பிறகு இதை குடும்ப தலைவியும் நெற்றியில் வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் இதை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இந்த திலகத்தை தொடர்ந்து நெற்றியில் இட்டு வந்தால் உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் என்பது வராது. அடிக்கடி முன்கோபப்பட்டு சண்டை போடும் கணவர் கூட 48 நாளில் சாந்தமாக மாறுவார். அடிக்கடி முன்கோபப்படும் மனைவியாக நீங்கள் இருந்தால் உங்களுடைய கோபமும் 48 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். முயற்சி செய்து பாருங்கள்.

எனக்கு முன் கோபம் வரும். நான் சண்டைக்காரி, நான் சண்டைக்காரன் என்று நீங்களே சொல்லிக்காதீங்க. கோபம் என்பது அடுத்தவர்களால் உருவாக்கப்படுவது கிடையாது. நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளுவது. அடுத்தவர்கள் நம்மை கோபப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கூட, அந்த கோபத்தை குறைத்து பொறுமையாக வாழ்பவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாக தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக அமாவாசை பரிகாரம்

உங்களுடைய குடும்பம் சொர்க்கமாக இருக்க வேண்டுமா. நரகமாக இருக்க வேண்டுமா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -