சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு இந்த தீபத்தை ஏற்றினால் போதும். வாழ்வில் நமக்கு வரக்கூடிய அத்தனை தடைகளும் சங்கடங்களும் தகர்க்கப்பட்டு, வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

vinayagar-vilakku
- Advertisement -

நமக்கு வரக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் தவிடு பொடியாக வேண்டும் என்றால் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு மிக மிக சிறந்தது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். சங்கடகரசதுர்த்தி வழிபாட்டில் ஒரு சிறப்புமிக்க வழிபாட்டைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாழ்க்கையில் தீராத துன்பங்கள், துயரங்களை அனுபவித்து வருபவர்கள் இந்தப் பரிகாரத்தை செய்தால் கூடிய சீக்கிரத்தில் உங்கள் கஷ்டங்களுக்கு ஒரு விமோசனம் நிச்சயம் கிடைக்கும். இன்றைய தினம் சங்கடசதுர்த்தி. அற்புதம் வாய்ந்த இந்த நாளில் இந்த பரிகாரத்தை நமக்காக கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நன்றியை தெரிவித்து பதிவிற்குள் செல்வோம்.

உங்கள் வாழ்க்கையை இனிமையாக மாற்றப்போகும் ஒரு வெல்லம் தீபத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சங்கடஹர சதுர்த்தி அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விநாயகரின் சிலை இருந்தாலும் சரி, விநாயகரின் திருவுருவப்படம் இருந்தாலும் சரி அந்தப் படத்தின் முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய விரதத்தை தொடங்கலாம். (விநாயகரின் சிலை வீட்டில் இருந்தால் கட்டாயமாக அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.)

- Advertisement -

விரதம் இருப்பது என்பது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. சங்கட சதுர்த்தி அன்று மாலை 6 மணி அளவில் இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றவேண்டும். ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசிக்கு மேலே ஒரு வெற்றிலை வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை இல்லை என்றால் வாழை இலை, அரச இலை இலையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த வெற்றிலையின் மேலே இரண்டு வெல்லக் கட்டிகளை வைக்க வேண்டும். உங்களுக்கு கடைகளில் அச்சுவெல்லம் கிடைத்தால் 2 அச்சு வெல்லத்தை வாங்கி வெற்றிலையின் மேல் வைத்துக்கொள்ளலாம். அச்சுவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கட்டி வெள்ளத்திலிருந்து சிறிய பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 2 உருண்டை வெல்லம் இருந்தால் போதும். அதை வெற்றிலையின் மேல் வைத்து விட வேண்டும். வெல்லத்தின் மேல் கொஞ்சமாக நெய் ஊற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

திரியை நெய்யில் போட்டு நன்றாக ஊற வைத்து கொள்ள வேண்டும். நெயில் ஊறவைத்த திரியை இந்த வெல்லத்தின் மேல்வைத்து விநாயகரை மனதார நினைத்து தீபமேற்ற வேண்டும். இந்த தீபம் குறைந்த நேரம் சுடர்விட்டு எரிந்தாலும் பரவாயில்லை‌. திரி, முழுவதும் எரிந்து வெல்லத்தில் இருக்கக்கூடிய நெய்யும் எரியும். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த தீபம் எரிந்து முடியும் வரை நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை விநாயகரிடம் வைக்க வேண்டும்.

தீபம் எரிந்து தானாக மலையேறிய பின்பு, அந்த வெல்லத்தை எடுத்து நம் வீட்டில் சமைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பசுமாட்டிற்கு கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால் கால் படாத இடத்தில் இந்த வெல்லத்தை போட்டு விட்டால் எறும்புகள் சாப்பிட்டுவிடும். 16 வாரங்கள் விநாயகரை நினைத்து இந்த தீபத்தை வீட்டிலும் ஏற்றலாம். அப்படியில்லை என்றால் வலம்புரி விநாயகர் இருக்கும் கோவிலில் இந்த தீபம் ஏற்றுவது என்பது மிக மிக சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

உங்களுடைய கசப்பான கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, உங்களுடைய வாழ்க்கையும் இந்த வெல்லத்தைப் போல இனிமையாக மாறும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள். வாழ்நாளில் உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் துயரங்கள், மன வேதனையை கொடுத்திருந்தாலும் அதற்கான ஒரு தீர்வினை அந்த விநாயகர் காண்பித்து கொடுப்பார். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்து அனைவரும் பலனடைய வேண்டும் என்று விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -