சுக்கிரதோஷ பரிகாரம்

- Advertisement -

சுகங்களுக்கு அதிபதி சுக்கிர பகவான். எனினும் ஒரு சில ஜாதகங்களில் சுக்கிர பகவான் சரியான நிலைகளில் இல்லாமல் போனாலும் அல்லது பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும், அந்த ஜாதகருக்கு சுக்கிர தோஷம் ஏற்படுகிறது. சுக்கிர தோஷம் ஏற்பட்டால் ஒரு நபரின் தொழில் வாழ்க்கை, இல்லற வாழ்க்கை போன்றவற்றில் பலவிதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இங்கு நாம் சுக்கிர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட செய்ய வேண்டிய சுக்கிரதோஷ பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரதோஷ பரிகாரம்

ஜாதகத்தில் சுக்கிர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த சுக்கிர தோஷம் நீங்கி, சுக்கிர பகவானின் நல்லருளை பெற்று, வாழ்வில் பல நன்மைகளை பெற விரும்புபவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சிவபெருமானையும் அம்பாளையம் வழிபட்டு, அதே கோயிலில் தனி சன்னதியில் இருக்கின்ற சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை வருடத்திற்கு ஒரு முறை செய்வது கூடுதல் சிறப்பு.

- Advertisement -

சுக்கிர பகவானின் சிறப்பான அருளைப் பெற தங்கத்தில் மோதிரம் செய்து, சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்த வைரக்கல் ஒன்றை பதித்து, வலது கை மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் வைரக்கல் மோதிரத்தை அணிய விரும்ப மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் வைரக்கல்லுக்கு மாற்றாக சுக்கிர பகவானின் அம்சம் பொருந்திய ஜிர்கான் (Zircon) கல்லை தங்கத்தில் பதித்து மோதிரமாக அணிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற சுக்கிர தோஷம் நீங்க, ஏதேனும் ஒரு தேய்பிறை வெள்ளிக்கிழமை தினம் தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வரை சுக்கிர வார விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் காலையிலேயே எழுந்து, குளித்து முடித்துவிட்டு, அருகிலுள்ள கோயிலில் இருக்கின்ற நவகிரக சன்னதியில் சுக்கிர பகவானின் விக்கிரகத்துக்கு மல்லி பூ, மலர் மாலை சாற்றி, கற்கண்டுகளை நைவேத்தியம் வைத்து சுக்கிர பகவானுக்குரிய மந்திரம் துதித்து, 6 முறை நவகிரகங்களை சுற்றி வளம் வந்து வழிபட வேண்டும்.

- Advertisement -

சுக்கிர பகவானின் தோஷத்தால் வாழ்க்கையில் பலவித சிக்கல்களை சந்திப்பவர்கள், வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, வீட்டில் மகாலட்சுமி தேவி மந்திரம் துதித்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் துர்கா சாலிசா எனும் மந்திர ஸ்தோத்திரத்தையும் தொடர்ந்து துதித்து வருவதால் சுக்கிர பகவானின் தோஷங்கள் நீங்கி, அவரின் நல்லருள் கிடைத்து இன்பமான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: திருமணத்திற்கு பிந்தைய களத்திர தோஷ பரிகாரம்

ருத்ராட்சங்களில் பல வகைகள் உண்டு அதில் 6 முக ருத்ராட்சம் என்பது சுக்கிர பகவானின் அம்சம் பொருந்தியதாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம் ஏற்பட்டு தவிப்பவர்கள், இந்த 6 முக ருத்ராட்சத்தை தங்களின் கழுத்தில் அணிந்து கொள்வதால் சுக்கிர தோஷம் நீங்கி வாழ்வில் மேலான பலன்கள் கிடைக்க பெறுவார்கள்.

- Advertisement -