சனி பகவானின் கொடூர பார்வையிலிருந்து தப்பிக்க அனுமனை இவ்வாறு வழிபட வேண்டும்

sani
- Advertisement -

பொதுவாக புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட மாதம் என்றும் சொல்லலாம். பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பல நல்ல நாட்கள் வருகின்றன. இந்த மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வருவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கின்றன. புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதால் சனிபகவானின் பார்வை பலவீனம் அடைந்து கெடுபலன் குறையும். புரட்டாசி மாதம் அனுமனை வணங்குவதன் மூலமாகவும் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட முடியும். இவ்வாறு அனுமனை வணங்கக்கூடிய புரட்டாசி மாத வழிபாடு பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal2

சனியின் பிடியிலிருந்து விடுபட:
சனிக்கிழமை முழுவதுமே உபவாசம் இருந்து அன்றைய தினம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அனுமனை வணங்கி வருவதன் மூலமும் சனி கிரக தோஷத்தில் இருந்து தப்பித்து, சனிபகவானின் பிடியிலிருந்து விடுபட முடியும்.

- Advertisement -

யார் ஒருவர் அனுமனை வணங்கி வருகிறார்களோ அவர்களுக்கு சனி பகவானின் தொந்தரவு இருக்காது. அனுமன் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி அனுமனுக்கு அர்ச்சனை செய்து அவர் கழுத்தில் இருக்கும் துளசி மாலையில் இருந்து கொடுக்கப்படும் துளசியையும், அவர் உடலில் பூசி இருக்கும் செந்தூரத்தையும் வாங்கி வந்து நமது பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

hanuman-sivan

இந்த செந்தூரத்தை தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொண்டு நாம் வெளியில் செல்வதன் மூலம் சனியின் கொடூர பார்வையிலிருந்து தப்பிக்க முடியும்.

- Advertisement -

சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் பக்தர்கள் சனிக்கிழமை தோறும் தவறாமல் உபவாசம் இருந்து ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரத்தை 108 முறை காகிதத்தில் எழுதி அதனை மாலையாக தொடுத்துக் கொண்டு, ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசி மாலையுடன், நம் கைகளால் தொடுத்து வைத்திருக்கும் ஸ்ரீராமஜெயம் மாலையையும் சேர்த்து அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு 9, 11, இருபத்தி ஒன்று என ஒற்றைப்படை எண்ணிக்கையில் எத்தனை வாரங்கள் முடியுமோ அத்தனை வாரங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் சனி பகவானின் பிடியில் மாட்டிக்கொண்டு தீராத கஷ்டத்தை அனுபவித்து வருபவர்கள் அதில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

vetrilai-malai-hanuman

சனிக்கிழமையில் யாரும் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடாது. இந்த நாளில் நம்மால் முடிந்தவரை தானங்கள் மட்டுமே செய்திட வேண்டும். எனது சனிக்கிழமை அன்று விரதத்தை முடித்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதன் மூலமும் உங்களின் துன்பத்திலிருந்து விடுபட முடியும் சனியின் கெடுபலன்கள் குறையும். அதுமட்டுமல்லாமல் புரட்டாசி மாத தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்குவதன் மூலமும் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

- Advertisement -