சனி திசை மாற்றத்தால் இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கும் யோகம் தான்

- Advertisement -

“நீதி தேவன்” எனவும், “மந்தன்” எனவும் அழைக்கப்படுகின்ற கிரகம் சனி பகவான் ஆவார். ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி நடைபெற்றது. தற்போது கும்ப ராசியிலிருக்கும் சனி பகவானின் 10ஆம் வீட்டு பார்வை விருச்சிக ராசியில் விழுகிறது. அதே போன்று ஏப்ரல் 6 ஆம் தேதி மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிய சுக்கிர பகவானின் 7 ஆம் வீட்டு பார்வை ராசியாகவும் விருச்சிக ராசி இருக்கிறது.

பொதுவாக 10 ஆம் வீடு என்பது தொழில், உத்தியோகம் போன்றவற்றை குறிக்கும் ஸ்தானமாகும். எனவே தொழில், வியாபாரம் ரீதியாக சில ராசிகளுக்கு நன்மைகள் ஏற்பட போகிறது. அத்துடன் சுக்கிரன் மற்றும் சனி கிரகங்கள் தற்போது இருக்கின்ற அமைப்பு காரணமாக சில ராசிகளுக்கு ஷஷ யோகம், மாளவ்ய ராஜயோகம் போன்றவை ஏற்படுகின்றன. இத்தகைய நற்பலன்களை பெறுகின்ற ராசிகள் எவை என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷபம்
ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். பத்தாம் வீடு என்பது தொழிற் ஸ்தானமாகும். எனவே ரிஷப ராசியினருக்கு, தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதாலும், ரிஷப ராசியில் சுக்கிரன் இருப்பதால் ஏற்படும் “மாளவ்ய ராஜயோகம்” காரணமாகவும் இந்த ராசியினருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும். தங்களுக்கு கீழான தொழிலாளர்களால் செல்வமும், புகழும் உண்டாகும். சனிபகவான் இரும்புக்கு அதிபதி என்பதால் சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகமும் ஏற்படும்.

புதிய தொழில், வியாபாரங்கள் ரீதியில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பெரிய நிறுவனங்களுடன் தொழில் வியாபார ஒப்பந்தங்கள் செய்யும் சூழல் அமையும். ரிஷப ராசிக்கு 10 ஆம் வீட்டில் இருக்கின்ற இந்த சனி பகவான் இந்த ராசியினருக்கு 7 ஆம் வீடான விருச்சிகத்தில் பார்வையை செலுத்துகிறார் எனவே திருமணம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் திருமணமான தம்பதிகளிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனியின் 10 ஆம் வீட்டு பார்வையால் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கக்கூடிய காலமாக இந்த சனியின் பார்வை காலம் அமைகிறது. மேலும் சிம்ம ராசிக்கு 4 ஆம் வீடான விருச்சக ராசியில் சனியின் பத்தாம் வீடு பார்வை ஏற்படுவதால் தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.

குறிப்பாக இரும்பு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். அரசு உத்தியோகங்களில் இருப்பவர்கள் பிறரை அதிகாரம் செலுத்தும் வகையிலான பதவி உயர்வு பெறுவார்கள். பூர்வீக அசையா சொத்துக்கள் கிடைப்பது, புதிய வீட்டு மனை வாங்குவது போன்ற யோகமும் சிலர் பெறுவார்கள்.

- Advertisement -

கும்பம்
கும்ப ராசியினருக்கு அந்த ராசியிலேயே சனிபகவான் இருப்பதாலும், கும்பராசி என்பது சனி பகவானின் சொந்த ராசியாக இருப்பதாலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஷஷ யோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் போன்ற யோகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த யோகங்களால் கும்ப ராசியில் இருப்பவர்கள் சனி பகவானின் முழுமையான அருளைப் பெறுகின்றனர். அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சி பலன்கள் 2023

தங்கள் தகுதிக்கு தொடர்பு இல்லாத வேலையில் இருந்தவர்கள், தாங்கள் விரும்பிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். இரும்பு, கான்ட்ராக்ட் லேபர் போன்ற தொழிலில் இருப்பவர்கள் இந்த காலங்களில் சிறந்த பொருளாதார முன்னேற்றங்களை பெறுவார்கள்.

- Advertisement -