இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமை, இந்த நாளை தவற விடாமல் பெருமாள், மகாலட்சுமி தாயார் இருவரின் அருளோடு சேர்த்து பொருளையும் பெற, இந்த ஏலக்காய் மாலை வழிபாட்டை செய்து விடுங்கள்.

- Advertisement -

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
இந்த குறளில் உள்ளதை போல பொருள் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மை தான். ஆனால் அருள் இல்லாத இந்த பொருளால் நமக்கு எந்த ஒரு இன்பமும் கிடைத்து விடாது. நாம் இதுவரை மகாலட்சுமி தாயாரிடம் நகை வேண்டும், பணம் வேண்டும், என்றெல்லாம் வேண்டி பல பூஜை, பரிகாரங்கள் எல்லாம் செய்து வருகிறோம். ஆனால் அருள் வேண்டும் என்று நாம் இதுவரை கேட்டிருப்போமா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்.

உங்களுக்கு இந்த எல்லா வளமும் நலனும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களின் அருள் நிச்சயம் வேண்டும். அருள் இல்லாமல் கிடைத்த பணம், நகை எல்லாம் வெறும் பொருளாகவே தான் இருக்கும். அதை வைத்து உங்கள் வாழ்வில் எந்த ஒரு சந்தோஷங்களோ, நிம்மதியும் கிடைக்காது. இது இந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல அவ்வுலக வாழ்க்கைக்கும் பொருந்தும். அப்படிபட்ட பொருளோடு அருளையும், ஆசியும் சேர்த்து பெற இந்த புரட்டாசி நான்காவது சனிக்கிழமையில் மஹாக்ஷ்மி தாயாருக்கும், பெருமாளுக்கும் சேர்த்து இந்த ஏலக்காய் மாலை வழிபாட்டை செய்வது குறித்த பதிவு தான் இது.

- Advertisement -

நாராயணர் மகாலட்சுமி தாயார் இருவரின் அருளையும் ஒன்றாகவே பெற இந்த புரட்டாசி நான்காவது சனிக்கிழமை மிகவும் உகந்த நாள் இந்த நாளில் அவர்களுக்கு நான் ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் நமக்கு அவர்களின் அருளும் ஆசியும் முழுவதுமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த வழிபாட்டிற்கு தேவை ஏலக்காய் மட்டுமே. அந்த ஏலக்காய் எண்ணிக்கை 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து, மஞ்சள் நிற நூலால் இந்த ஏலக்காயை மாலையாக கட்டி உங்கள் வீட்டில் இருக்கும் எந்த தாயாரின் படமாக இருந்தாலும் சரி, பெருமாளின் எந்த திரு உருவப்படமாக இருந்தாலும் சரி, இல்லை இருவரும் சேர்ந்த படமாக இருந்தால் இன்னும் விசேஷம். இந்த படத்திற்கு ஏலக்காய் மாலையை அணிவித்து மகாலட்சுமி தாயாரிடம் தங்களின் அருளும் நாராயணரின் அருளையும் சேர்த்து எனக்கு தாருங்கள் என்று மனதார வேண்டிக்கொண்டு பூஜையை செய்தால் போதும். இதற்கு வேறு ஏதும் விசேஷமாக செய்ய வேண்டியதில்லை ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

இந்த மாலை அப்படியே படத்தில் இருக்கட்டும் இந்த புரட்டாசி மாதம் முடியும் வரை மாலை படத்தில் இருக்கலாம் தவறு ஏதும் இல்லை. சுத்தமாக வைத்திருக்க முடியும் என்றால் வைத்திருங்கள் இல்லை பூஜை செய்த அடுத்த நாளே இந்த மாலை எடுத்து அதை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காய் பொடியை உங்கள் வீட்டு சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்க்கக்கூடாத இரண்டு விஷயம் ஒன்று அசைவம் சமைக்கும் போது சேர்க்கக்கூடாது, மற்றொன்று மறுபடியும் நாம் தெய்வத்திற்கு நெய்வேத்தியம் செய்யும் எதிலும் இதை சேர்க்கக்கூடாது. இந்த இரண்டு விஷயங்களை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

மிக மிக எளிமையான இந்த மாலை வழிபாட்டை இந்த நாள் முடியும் வரை செய்ய உங்களுக்கு நேரம் இருக்கிறது. இதில் உங்களுக்கு வசதியான நேரம் எதுவோ அதில் செய்து கொள்ளுங்கள். இன்றைய தினத்தில் சுக்கிர ஓரையில் செய்தால் விசேஷம் முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். இந்த நாள் முழுவதும் இந்த மாலை வழிபாட்டை செய்து பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. பொன்னும் பொருளும் சேர இந்த பொருட்களை பெருமாளின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

நீங்களும் இந்த ஏலக்காய் மாலை வழிபாடு செய்து மஹாலக்ஷ்மி தாயாரின் அருளும் நாராயணரின் ஆசியும் முழுவதுமாக கிடைக்கப் பெற்று, மேலும் மேலும் வாழ்க்கையை நல்ல முறையில் செல்வ செழிப்போடு
வாழுங்கள்.

- Advertisement -