சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள் தரித்திரம் பிடிக்கும் தெரியுமா? தெரியாமல் கூட இனி இந்த தவறை செய்து அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் வறுமை உண்டாகும்!

annapoorani-food
- Advertisement -

நாம் உண்ணும் உணவை அன்னபூரணி என்கிறோம். அதையும் கடவுளாகவே பாவித்து வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். உண்ணும் உணவிற்கு மகத்துவமான தெய்வாம்சம் நிறைந்துள்ளது. சமைக்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் அன்னபூரணியை நினைத்து சமைத்தால் வறுமை உண்டாகாது என்று கூறுவார்கள். இப்படி சமைக்கப்பட்ட இந்த உணவினை சாப்பிடும் பொழுது செய்யக்கூடாத தவறு என்ன? இதனால் உண்டாகக் கூடிய கெடுதல்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சாப்பிடும் பொழுது எப்பொழுதும் வலது கையில் தான் சாப்பிட வேண்டும். இடது கையில் சாப்பிட்டால் தரித்திரம் உண்டாகும், நோய்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உண்ணும் உணவை வீணாக்கக்கூடாது. சமைப்பவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கு போட்டு சரியாக சமைக்க வேண்டும். சாப்பாடு குறைவில்லாமலும் இருக்க வேண்டும். சாப்பிடுபவர்களுடைய மணம் கோணாமலும் சமைக்க வேண்டும். இதற்கு முதலில் அக்கறையும், அன்பும் கலந்த சமையலை செய்ய வேண்டும். அப்பொழுது தான் அது ருசிக்கும்.

- Advertisement -

சாப்பிடும் பொழுது காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் தரையில் அமர்ந்து சாப்பிட வலியுறுத்தினர். தரையில் அமர்ந்து சாப்பிட்டு எழுவதால் கால் மூட்டுகள் வலுவாகின்றன. இன்று பெரும்பாலும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதால் மூட்டு வலி போன்ற தொந்தரவுகளுக்கு இளம் வயதிலேயே ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சாப்பிடும் பொழுது அதே போல காலணிகளை அணிந்து கொண்டு சாப்பிடக்கூடாது. இது மகா தரித்திரத்தை உண்டு பண்ணக்கூடிய செயலாகும். உண்ணும் உணவை பரிமாறுபவர்களும், அதை ஏற்று சாப்பிடுபவர்களும் காலணி அணிந்திருக்கக் கூடாது. கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கை, கால்களை கழுவி விட்டு தான் சாப்பிட அமர வேண்டும் என்று அதற்காகத் தான் கூறுகின்றனர்.

- Advertisement -

திடீரென வெளியில் ஹோட்டலுக்கு செல்கிறோம் அங்கு அமர்ந்து சாப்பிடும் பொழுது கூட கால்களில் காலணிகளை அணிந்து கொண்டு அப்படியே சாப்பிடுகிறோம். காலணிகளை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, பின்னர் நீங்கள் கையை கழுவி விட்டு சாப்பிட வேண்டும். காலணிகளுடன் அமர்ந்து சாப்பிட்டால் அன்னபூரணிக்கு கோபம் வரும். இதனால் அன்ன தோஷம் உண்டாகும் அன்னதோஷம் உண்டாகினால் வறுமை உண்டாகும். இந்த தோஷம் நம்மை மட்டும் அல்லாமல் அடுத்தடுத்த சந்ததியினரை கூட பாதிக்கக்கூடும். வறுமையான சூழ்நிலை பசி, பட்டினி போன்றவை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிக்கலாமே:
பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

வீட்டில் அமர்ந்து சாப்பிடுபவர்களும் படுக்கையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. படுத்துக் கொண்டே சாப்பிடுவதும் கூடாது. இது போன்ற செயல்களும் தரித்திரத்தை உண்டு பண்ணுபவையாக விளங்குகிறது. சாப்பிடும் பொழுது சாதத்தை அதிக அளவில் கீழே சிந்த விடக்கூடாது. பெரும்பாலும் குழந்தைகள் இது போல சாதத்தை ஆங்காங்கே சிதற விட்டு, பின்னர் சாப்பிடுவார்கள். இது போல செய்யக்கூடாது. சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுதும் சாப்பிடும் நேரத்தில் ஒரு உணவு டவலை விரித்து அதன் மீது வைத்து சாப்பிட சொல்லிக் கொடுக்க வேண்டும். அன்னத்தை தரையில் போட்டு கால்களால் மிதிக்கக்கூடாது எனவே மற்றவர்களின் கால்களில் மிதிபடும் என்பதால் இவ்வாறு செய்யக்கூடாது.

- Advertisement -