Sarpa dosham : சர்ப்பதோஷம் விலக பரிகாரம்

sarpa dosham pariharam in tamil
- Advertisement -

சர்ப்பம் என்றால் பாம்பு என பொருள். ஜாதகத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்கள் சர்ப்பம் எனும் பாம்பின் வடிவை கொண்டவர்கள். இந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் 2, 4, 5, 7, 12-ம் இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபர்களுக்கு சர்ப்பதோஷம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த சர்ப்பதோஷம் ஏற்பட்டவர்கள் தங்களின் வாழ்வில் நற்பலன்களை அனுபவிக்க செய்ய வேண்டிய சர்ப்பதோஷம் பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சர்ப்பதோஷம் பரிகாரம்

வெள்ளி அல்லது ஒயிட் மெட்டல் உலோகத்தில் செய்யப்பட்ட ஐந்து தலை நாகப்பாம்பின் சுண்டு விரலளவிற்க்கும் குறைவான விக்கிரகத்தை வாங்கிக் கொண்டு வந்து, தங்களின் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய அளவிலான கிண்ணத்தில் அரிசியை நிரப்பி, அதன் மீது அந்த ஐந்து தலை நாகத்தின் விக்கிரகத்தை வைத்து, அதற்கு தினமும் மஞ்சள் தடவி, ஆராதனை காட்டி சிவபெருமானுக்குரிய மந்திரங்களை 108 முறை துதித்து வழிபாடு செய்து வரும் பட்சத்தில் ஜாதகத்தில் உண்டான சர்ப்பதோஷத்தால் வாழ்வில் ஏற்படும் எதிர்மறையான பலன்கள் நீங்கி, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.

- Advertisement -

ஜாதகத்தில் சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அந்த தோஷம் நீங்க, எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஒரு தேய்பிறை திங்கட்கிழமை தினத்தன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோவிலுக்கு சென்று சிவபெருமானையும் அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் சர்ப்ப தோஷம் நீங்கி வாழ்வில் நற்பலன்கள் உண்டாகும்.

சர்ப்பதோஷம் ஜாதகத்தில் இருந்து, அதனால் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகின்ற நாக பஞ்சமி விழா தினம் முழுவதும் விரதம் இருந்து புற்றுள்ள கோயிலுக்கு சென்று, புற்றுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதாலும் சர்ப்ப தோஷங்களின் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

வேண்டிய வரம் அனைத்தும் தரக்கூடிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார். அந்த முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய தினங்களாக மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி திதிகள் வருகின்றன. ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் பெற்றவர்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற தேய்பிறை சஷ்டி தினத்தன்று ஒரு சிவன் கோயிலில் சர்ப்ப சாந்தி பூஜை செய்து கொள்வதாலும் வளமான வாழ்க்கை உண்டாகும்.

சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களுக்கு மிக சிறந்த பரிகாரமாக இருப்பது நவரத்தின கல் மோதிரம் அணிவது தான் எனக் கூறப்படுகிறது. அதிலும் கோமேதகம் அல்லது வைடூரிய கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து, அதை ஒரு சுபமுகூர்த்த நேரத்தில் உங்களின் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வதால் சர்ப்ப தோஷ பாதிப்புகள் விலகும்.

இதையும் படிக்கலாமே: மங்கள் தோஷ பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினங்களில் கருப்பு நிறத்தில் இருக்கும் நாய்களுக்கு பிஸ்கட் அல்லது வேறு ஏதேனும் உணவு பொருட்களை உண்ணக் கொடுப்பதாலும் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற சர்ப்ப தோஷத்தின் கடுமை தன்மை குறைந்து வளம் பொருந்திய வாழ்க்கை உண்டாகும்.

- Advertisement -