சஷ்டி விரதம் எளிமையாக இருப்பது எப்படி?

murugan dheepam
- Advertisement -

தீபாவளிக்கு அடுத்து வருவது கந்த சஷ்டி விரதம்.விரதங்களிலே மிகவும் அற்புதமான அதே நேரத்தில் அதிக பலனை தரக்கூடிய விரதமாக இந்த கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் வாழ்க்கையில் சகல விதமான நலன்களையும் கண்டிப்பான முறையில் பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படியான இந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருக்க வேண்டும். அதாவது தீபாவளிக்கு அடுத்த தினமான திங்கட்கிழமை தொடங்கி ஆறு நாட்கள் இருக்க வேண்டும். ஆறாவது நாள் சூரசம்காரம் முடியும் அன்று பலர் விரதத்தை முடிப்பார்கள். ஒரு சிலர் அதற்கு அடுத்து முருக வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தன்று விரதத்தை முடிப்பார்கள். இது அவரவர் விருப்பத்தை பொறுத்து.

- Advertisement -

ஆறு நாட்களும் விரதம் இருக்கும் போது இதற்கு பல விதிமுறைகள் உணவு கட்டுப்பாடுகள் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் இப்படி விரதம் இருக்க முடிவதில்லை. ஒரு சிலர் உடல் நிலை இதற்கு ஒத்து வராமல் இருக்கலாம். பணி சூழல் இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த விரதத்தை இருக்க வேண்டும் முருகப்பெருமானின் அருள் வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள் பலரும் உண்டு.

அப்படியானவர்கள் எளிமையான முறையில் சஷ்டி விரதத்தை ஒரே ஒரு நாள் மட்டும் இப்படி இருந்தால் போதும். ஆறு நாட்களும் விரதம் இருந்ததற்கான பலனை பெறலாம். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சஷ்டி விரதம் எளிமையாக இருப்பது எப்படி

இந்த விரதம் தொடங்கும் நாளான திங்கட்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டில் பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை முருகப்பெருமானை நினைத்து ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபம் கிழக்கு முகமாக எரிய வேண்டும். நீங்கள் வடக்கு திசை பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும். இதை படிக்க முடியாதவர்கள் ஒலிக்க விட்டு கேட்கலாம். காலை மாலை இரண்டு முறை இது போல தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசத்தை படித்தால் போதும். விரதம் எதுவும் இல்லாமல் அசைவத்தை மட்டும் தவிர்த்து விட்டு நாள் முழுவதும் முருகப்பெருமானை நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி இப்படி தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும்.

- Advertisement -

இந்த ஆறு நாளும் கூட என்னால் செய்ய முடியாது என நினைப்பவர்கள் சூரசம்காரம் நாளன்று மட்டும் காலையில் எழுந்து குளித்து முடித்து இதே போல கந்த சஷ்டி கவசம் படித்து வழிபாடு செய்யலாம். வாய்ப்பு உள்ளவர்கள் அன்றைய ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். இதுவும் அவரவர் சவுகரியத்தை பொறுத்து தான்.

அன்றைய ஒரு நாளும் விரதம் இல்லாமல் வழிபாடு மட்டும் செய்து சிந்தையிலே முருகனை நினைத்து வழிபட்டாலே முருகப்பெருமானுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஒவ்வொரு வழிப்பாடும் முறைகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். உண்மையான உள்ளன்போடு இறைவனை நினைத்து வணங்கும் அனைவருக்கும் முருக பெருமானின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவிற்கு பீரோவில் வைக்க வேண்டிய பொருள்

இந்தப் பதிவில் உள்ளப்படி சஷ்டி விரதத்தை எளிமையான முறையில் கடைபிடித்து முருகப்பெருமானின் அருள் ஆசியை பரிபூரணமாக பெற்று வாழ்க்கையில் எல்லா வளமும் நலனும் பெற்று இன்பமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -