பண வரவிற்கு பீரோவில் வைக்க வேண்டிய பொருள்

bero mahalakshmi panam
- Advertisement -

பண்டிகை என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கக் கூடியது. அதிலும் இந்த தீபாவளி பண்டிகை அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாட கூடிய ஒன்று. இன்றைய நாளில் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடி கொண்டு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய அற்புதமான நாள்.

இன்றைய நாளில் நம் குடும்பம் பணக்கஷ்டம் இல்லை கடன் தொல்லை நீங்கி நிம்மதியாக வாழ ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யலாம். பொதுவாக தீபாவளி அன்று மாலை குபேர வழிபாடு சிறப்பு வாய்ந்தது. அந்த வழிபாடு செய்பவர்களும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் தவறில்லை. இப்போது அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பண வரவு அதிகரிக்க பீரோவின் மேல் வைக்க வேண்டியது

பணவரவு அதிகரிக்க பல வகையான பரிகாரங்கள் இருந்தாலும் இன்றைய நாளில் செய்யக் கூடிய இந்த பரிகாரம் அதிக பலனை தர கூடியது. வீட்டில் பணம் வைப்பது என்றால் அது பீரோ தான். ஆகையால் பீரோவை வாஸ்துப்படி வைக்க வேண்டும். அதை போல் பீரோவை முறையாக கையாள வேண்டும். பீரோவை எப்போதும் தென்மேற்கு திசையில் வைப்பது சிறந்தது.

அதே போல் கண்ணாடி உள்ள பீரோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி வைப்பதாக இருந்தால் பீரோவில் நாம் வைக்கும் பணத்தை எதிரொலிக்கும் விதமாக உள்ளே கண்ணாடியை வைக்கலாம். அதே போல் பீரோவில் பழைய நியூஸ் பேப்பர், பெண்கள் மாதவிலக்கு சமீபத்தில் பயன்படுத்தும் துணி நாக்கின் போன்றவற்றை வைப்பது தவிர்க்க வேண்டும். வீடுகளில் பொருட்கள் வைக்க இடமில்லை என்பதால் பீரோவின் மேல் தேவையற்றதையெல்லாம் குவித்து வைத்திருப்பார்கள். அது போல செய்வதும் தவறு.

- Advertisement -

பீரோவை முடிந்த வரை மரத்தினால் ஆனதாக பயன்படுத்த வேண்டும். குறைந்தது பெட்டியாவது மரத்திலானதாக இருந்தால் நல்லது. இரும்பிலான பொருட்கள் எல்லாம் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் மரத்திலான பொருட்களுக்கெல்லாம் சுக்கிர வசியம் அதிகம் இருக்கும். இப்போது பணவரவு அதிகரிக்கவும் கடன் நீங்கவும் பீரோவின் மேல் வைக்க இதை வைக்க வேண்டும்.

அதற்கு ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அது சில்வர் வெள்ளி, பித்தளை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன் மேல் ஒரு சிகப்பு நிற துணியை விரித்து வைத்து விடுங்கள். துணியில் பட்டை, கிராம்பு, பச்சைக் கற்பூரம், கோமதி சக்கரம், தாமரை மணி, அண்ணாச்சி பூ, பிரியாணி இலை, மருதாணி குச்சி, மல்லிகை பூ, புதினா இலை கடன் அதிகமாக இருப்பவர்கள் மட்டும் ஒரு புளியங்குச்சியை மறக்காமல் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இவற்றுடன் உங்களிடம் இன்னும் தெய்வ சக்தி அதிகரிக்க கூடிய சங்கு, ஜவ்வாது,புனுகு போன்றவற்றையெல்லாம் சேர்த்து வைக்கலாம். இதில் நம் வீட்டில் இறைசக்தி அதிகரிக்க பணம் ஈர்ப்புக்கும் பயன்படுத்தக்கூடிய எந்த பொருள்களை வேண்டுமானாலும் வைக்கலாம் . வெள்ளி நாணயம் இருந்தால் அதையும் சேர்த்து வைப்பது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும். இவற்றையெல்லாம் தீபாவளி அன்று மாலை வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு கற்பூர தீபாராதனை காட்டிய பின் பீரோவின் மேல் வைத்து விடுங்கள்.

இது அப்படியே இருக்கட்டும் பூஜை செய்யும் பொழுதெல்லாம் இதற்கு தீபாராதனை மட்டும் காட்டி வந்தால் போதும் சாம்பிராணி தூபம் போடும் போது இதற்கும் காட்டி விடுங்கள். இதை மாதத்திற்கு ஒருமுறை மாற்றி வந்தால் போதும். இதை மாற்றும் போது கோமதி சக்கரம், தாமரை மணி போன்ற பொருட்களை எல்லாம் எடுத்து விட்டு மற்றவற்றை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று மாலை சொல்ல வேண்டிய குபேர மந்திரம்

இந்த பரிகாரம் மிக மிக எளிமையானது தான். பணம் வைக்கும் இடத்தில் பணத்தை ஈர்க்கக் கூடிய இந்த பொருட்களை வைக்க வேண்டும். இதனால் பண ஈர்ப்பு அதிகரித்து பணவரவு பெருகினாலே கடன் தொல்லை இன்றி நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -