கருப்பு நிற பிராணிகளை வளர்த்தால் இப்படி ஒரு பயன் இருக்கிறதா? இதென்ன அதிசயமா இருக்கு!

black-animals

அந்தக் காலத்தில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் கிராம புறங்களில் ஆடு, மாடு, கோழி போன்ற விலங்கினங்களை வளர்ப்பது சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். அவர்கள் வளர்த்து வந்த ஆடு, கோழிகளை கோவிலுக்கு தானமாகக் கொடுப்பது தொடர்ந்து செய்து வந்தார்கள். அதன் பின்னணி என்ன? என்பதையும், கருப்பு நிற விலங்கினங்களை வளர்த்தால் என்னென்ன பயன்கள் இருக்கும்? என்பதையும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

goat-hen

கிராமத்து வாசிகளிடம் தங்களுடைய குறைகளையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கூறி சக்தி வாய்ந்த தெய்வங்களிடம் பிரார்த்தனை வைப்பது வழக்கம். அந்தப் பிரார்த்தனை படி அவர்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறினால் அவர்கள் வளர்க்கும் ஆடு, கோழி போன்ற விலங்கினங்களை தானமாக கொடுத்து விடுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், அப்படி வளர்க்கப்படும் விலங்கினங்கள் கருப்பு நிறமாக இருப்பதால் வீட்டில் ஏற்படும் தோஷங்களை போக்கும் என்பதும் ஐதீகம்.

வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகவும், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி புத்துணர்வு பெறவும், தாங்கள் வளர்க்கும் கருப்பு நிற ஆடு மற்றும் கருப்பு நிற கோழிகளை சில காலம் வரை வளர்த்து பின்னர் அதை கோவில்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது வழக்கம். இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி விடுவதாக ஐதீகம் உள்ளது. காத்து, கருப்பு என்று கூறப்படும் சில துர்சக்திகள் வீடு அல்லது நம்மிடம் எளிதாக குடியேறுவதற்கு நாம் செய்யும் சில செயல்கள் காரணமாக இருக்கும்.

black-hen

நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் நிச்சயம் ஒரு காரணம் இருந்து கொண்டிருக்கும். அப்போதெல்லாம் உச்சி வெயில் நேரத்தில் யாரும் வெளியில் கூட அனுப்ப மாட்டார்கள். பகல் 12 மணிக்கு வெயில் தகிக்கும் அந்த வேளையில் துஷ்ட சக்திகளின் ஆற்றல் அதிகரித்து இருக்குமாம். அதே போல் தான் இரவு வேளைகளில் தலையை அலசுவது, வெளியில் நடமாடுவது போன்ற செயல்களை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

- Advertisement -

இவைகள் மூடநம்பிக்கை என முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது. உடலில் தோஷங்கள் நுழைவதை தடுக்க வீட்டில் கருப்பு நிறத்தில் இருக்கும் மீன் அல்லது கருப்பு நிற மீன், நாய், கருப்பு மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒரு வீட்டு விலங்குகளை வளர்த்து வந்தால் காத்து கருப்பு நுழைவதை இவைகள் தடுத்து விடுமாம்.

black-fish

ஆடு, மாடு, கோழி எல்லாம் வளர்க்க முடியாவிட்டாலும் நாய், பூனை, மீன் போன்ற உயிரினங்களை தாராளமாக நம்மால் வளர்க்க முடியும். கருப்பு என்பதை பலரும் அபசகுனமாக கருதுகிறார்கள். உண்மையில் கருப்பு என்பது திருஷ்டியை போக்கும் வலிமை உள்ளது. அதனால் தான் அரைஞாண் கொடி கருப்பு கயிறில் கட்டப்படுகிறது. நம் உடலில் அல்லது நாம் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் கருப்பு நிறத்தில் இருந்தால் அதற்கு நம் கைகளாலேயே தினமும் உணவு கொடுத்து வளர்த்து வந்தால் நம்மிடம் எந்த விதமான துஷ்ட சக்திகள் நெருங்காது என்பது ஆன்மீக ரீதியான உண்மை.

cat

இவைகளை நிரந்தரமாக நம்முடன் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. சில காலம் வரை வளர்த்து விட்டு பின் அதனை மற்றவர்களுக்கு தானமாகக் கொடுத்து விடுவதால் தோஷங்கள் நீங்கும் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை. மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதால் அவர்களுக்கு எதுவும் பிரச்சினை வராதா? என்று கேட்டால் நிச்சயமாக வராது. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழி போன்றவற்றை கருப்பு நிறத்தில் கோவில்களுக்கு தானமாக வழங்கியதன் பின்னணி காரணமும் இது தான். தங்களது வீடுகளில் இருக்கும் துஷ்ட தோஷங்கள் நீங்க இவ்வாறு செய்து வந்தனர். இவற்றில் உங்களால் எதை வளர்க்க முடியுமோ, அதை வளர்த்து உங்கள் கைகளாலேயே உணவிட்டு சிறிது காலத்திற்கு பின்பு மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
1 ரூபாயைக் கூட, 1 லட்சமாக மாற்றக்கூடிய சக்தி இந்த நேரத்திற்கு உண்டு! இன்றும், நாளையும் வரக்கூடிய இந்த அபூர்வ நேரத்தில், பணத்தை சேமித்தால் பணம் பல மடங்கு பெருகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.