குபேரரின் மனதை குளிர வைத்து வற்றாத செல்வ வளத்தை பெற சூட்சம ரகசியம்.

நாம் அனைவரின் மனதிலும் குபேரராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோராலும் குபேரராகிவிட முடியுமா என்று கேட்டால் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஆனால் அந்த குபேரரின் கடைக்கண் பார்வை நம் மீது லேசாக பட்டாலும் கூட நம் வறுமையை நிரந்தரமாக போக்கி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் குபேரரின் மனதை குளிர வைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான ஒரு வழிபாட்டு முறையைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuberan

நம்மில் பலரின் வீட்டில் குபேர பொம்மையானது ஷோகேஸ் பெட்டியிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்திருப்போம். பூஜை அறையில் இருந்தால் எப்பவும் போல அந்த சிலைக்கு பூப்போட்டு வழிபடுவோம். ஆனால் வேறு எந்த இடத்திலாவது வைத்திருந்தோமேயானால் அதற்கு எந்த ஒரு வழிபாட்டையும் நாம் செய்ய மாட்டோம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அந்த குபேரரை நம் வீட்டில் எப்படி வைத்தால் அவரது மனம் குளிர்ந்து நமக்கு அதிர்ஷ்டம் பெருகும்?

முதலில் உங்கள் வீட்டில் எச்சில் படாமல் இருக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு பிளாஸ்டிக் தட்டாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த தட்டின் மீது குபேரர் சிலையையோ அல்லது பொம்மையை வைத்து விடுங்கள். அடுத்ததாக இந்த பூஜைக்கு தேவையான முக்கியமான ஒரு பொருள் சில்லறை காசுகள். அந்த சில்லரை காசுகளை 51, 101 என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கையில் எவ்வளவு சில்லரை காசுகள் கிடைக்கிறதோ அதை ஒற்றை படையில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சில்லரை காசுகளானது ஒரு ரூபாய் நாணயம், இரண்டு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம் இப்படி எல்லா நாணயங்களும் கலந்தும் இருக்கலாம். அதிலும் எந்த ஒரு தவறும் இல்லை.

Kuberan

தட்டின் மீது வைக்கப்பட்டுள்ள குபேரர் சிலைக்கு இந்த நாணயங்களால் அர்ச்சனை செய்யப்படவேண்டும். இந்த நாணயங்களை ஒன்றொன்றாக எடுத்து அந்த தட்டில் ‘ஓம் குபேராய நம’ என்ற மந்திரத்தை சொல்லி போட வேண்டும். இப்படி நீங்கள் உங்களது கையில் எத்தனை நாணயங்களை வைத்து இருக்கிறீர்களோ அத்தனை முறை குபேர மந்திரத்தை உச்சரித்து நாணயங்களை ஒன்றொன்றாக எடுத்து அந்த தட்டில் குபேர பொம்மையை சுற்றி போட்டுக் கொண்டே வர வேண்டும்.

- Advertisement -

kubera

இப்படி செய்யும் பட்சத்தில் குபேரர் என்றும் அந்த நாணயத்தின் மத்தியிலேயே இருப்பார். தினந்தோறும் நீங்கள் இதே நாணயத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, இதே மந்திரத்தை உச்சரித்துக் குபேர பூஜை செய்து வரலாம். தினம் தோறும் பூஜை செய்ய முடியாதவர்கள் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இந்த பூஜையை மேற்கொள்வது சிறந்தது. இந்த பூஜையை முடித்த பின்பு குபேரரும், நாணயமும் இருக்கும் அந்த தட்டை வடகிழக்கு மூலையில் வைத்துவிடவேண்டும். வடகிழக்கு மூலையில் நாணயங்களின் மத்தியில் இருக்கும் குபேரரின் மனது என்றும் நிறைவுடன் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டின் செல்வ வளத்திற்கு எந்த ஒரு குறைபாடும் வராது செல்வம் பெருகும். இது ஒரு சுலபமான வழிபாட்டு முறை தான். உங்கள் வீட்டில் குபேர பொம்மை இல்லாமல் இருந்தாலும் கூட புதியதாக சிறிய அளவு குபேரர் பொம்மையை வாங்கி வைத்து இந்த பூஜையை செய்வதன் மூலம் நல்ல பலன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
சம்பளம் வாங்கியவுடன் உங்களின் முதல் செலவு கட்டாயம் இதற்காக இருக்க வேண்டாம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kubera valipadu in Tamil. Kubera vazhipadu murai in Tamil. Kubera valipadu benefits in Tamil. Kubera poojai murai in Tamil. Kubera poojai vazhipadu in Tamil.