எத்தனை நாள் ஆனாலும் கெடாத உலகின் ஒரே நீர் இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா ?

ganga3

பொதுவாக நாம் நீரை ஒரு பாத்திரத்தில் சில காலம் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். அதில் இருந்து சில சமயம் துறுநாற்றம் கூட வரும். ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறது கங்கை நீர். கங்கை நதி ஒரு புனித நதி என்பது நாம் அறிந்ததே. அந்த நதியில் ஓடும் நீரில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து அது ஒரு அற்புதமான ரசாயன கலவையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

river ganga

கங்கை நீரை ஒரு செம்பு பாத்திரத்தில் சேகரித்து பின் அந்த பாத்திரத்தை நன்றாக மூடி வைத்தால், வருடக்கணக்கானாலும் அந்த நீர் கெடாமல் அப்படியே இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி பல சிறப்புக்கள் பெற்ற கங்கை நதியில் ஒருமுறையேனும் நீராடவேண்டும் என்று தவிப்பவர்கள் பலர்.

மகாகவி காளிதாசன் கங்கையை பற்றி கூறுகையில்,”கங்காதேவியே, யமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்குதான் இருக்கிறது” என்கிறார். இந்து மத நம்பிக்கை படி ஒருவர் கங்கையில் நீராடினால் அவர் பிறந்த நொடியில் இருந்து செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். இறந்தவரின் அஸ்தியை கங்கையில் கரைப்பதனால் அவர்களின் ஆத்மா சொர்கத்திற்கு செல்லும் என்பது நம்பிக்கை.

river ganga

பல சிறப்புக்கள் பெற்ற கங்கையின் பிறப்பிடம் இமயமலையில் உள்ள கோமுகி என்னும் பகுதியே என்று கூறப்படுகிறது. இப்பகுதி ஒரு சிறிய சுனை போல இருந்தாலும் உண்மையில் கங்கையின் பிறப்பிடமானது யாரும் காண இயலாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெரும் கங்கை நதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தினம் தோறும் மாலை வேலையில் கங்கை நதிக் கரையில் கங்கைக்கு பூஜை செய்வது வழக்கம். இந்த பூஜை “கங்கா ஆரத்தி” என்று அழைக்கப்படுகிறது.

- Advertisement -

river ganga

இதையும் பார்க்கலாமே:
அம்மாவாசை அன்று அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ

கங்கையில் குளிக்க இயலாதவர்கள் தாங்கள் வீட்டில் குளிக்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மந்திரத்தை தீபாவளி அன்று குளிக்கும்போது சொல்வது மேலும் சிறப்பு.

மந்திரம்:

கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோஜனானாம் சதைரபி
முச்யதேசர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் (ச) சச்சதி.