உங்க தோட்டத்திலே இந்த ஒரு செடி இருந்தா போதும், பூக்குற பூக்கள் எல்லாமே கண்டிப்பா காயாகும். பூ உதிரும் பிரச்சனையே இருக்காது. அது என்ன செடின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க

- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்து வளர்ப்பவர்கள் அனைவருமே சந்திக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய பிரச்சனை தான் இந்த செடிகளில் பூ உதிர்தல். அதாவது காய் பழங்கள் கொடுக்கும் செடி, மரங்களில் முதலில் பூக்கள் வரும் பூக்கள் வந்த பிறகு தான் அது காயாகி கனியாகும். சில நேரங்களில் பூக்கள் வரும் வரை செடி நன்றாக தான் இருக்கும். ஆனால் பூக்கள் வைத்து காயாகும் முன் உதிர்ந்து விடும். இது போன்ற பிரச்சனைகளுக்கு நாம் உரங்கள், பூச்சி கொல்லி கொடுப்பது போன்றவற்றை இது வரை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை வராமல் இருக்க ஒரு செடி வைத்தால் சரியாகும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? வாங்க அது என்ன செடி எப்படி அதை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் இந்த வீட்டுக் தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பூ உதிர்வு பிரச்சனைக்காக நாம் வைக்க வேண்டிய செடி திருநீற்றுப் பச்சை. இந்த மூலிகை செடியை தான் நாம் வைக்க வேண்டும். இது துளசி இனத்தை சேர்ந்தது பார்ப்பதற்கும் கிட்டத்தட்ட நாய்த் துளசி போலவே இருக்கும். இதிலிருந்து வரும் விதை தான் சப்ஜா விதை இதை பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம். இதன் இலைகளும் அதிக அளவு மருத்துவ குணங்கள் உண்டு. அது மட்டுமின்றி செடி, கொடிகளுக்கும் வளர இந்த செடி உதவி செய்யும் ஆகையால் தான் இதற்கு மூலிகைகளின் அரசன் என்ற பெயரும் உண்டு.

- Advertisement -

இந்தச் செடியை பராமரிப்பது ஒன்றும் பெரிய காரியம் கிடையாது. இது சாதாரணமாக தெருவோரங்களில் முளைக்கும் செடிகள் தான். இதை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் மரங்களுக்கு அடியில் இருக்கும் மண்ணை எடுத்து வந்து வைத்தாலே போதும் இந்த செடிகள் வளர்ந்து விடும். இதற்கென்று தனியாக உரங்கள் ஏதும் கொடுக்க வேண்டாம். பூக்கள் வைக்கும் போது அதில் விதைகள் இருக்கும் விதைகளை மட்டும் உடனே எடுத்து விட வேண்டும் இல்லை என்றால் அந்த விதைகளுக்கு பூச்சிகள் வரும். இந்த விதைகள் தான் சப்ஜா விதைகள் எனவே அதை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பராமரிப்பு என்று பார்த்தால் பூச்சி இருந்தாலும் இல்லையென்றாலும் வேப்பெண்ணை கரைசலை வாரத்திற்கு ஒரு முறை தெளித்து விட்டால் போதும்.

இப்போது பூ உதிரும் பிரச்சனைக்கு இந்த செடியை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். இது போன்ற பிரச்சனை இருக்கும் செடிகளுக்கு பக்கத்தில் இந்த செடியை வைத்து விடுங்கள். இந்த செடியை சுற்றி எப்போதும் தேனீக்கள் அதிகமாக இருக்கும். இதனால் மகரந்த சேர்க்கை நடை பெறும் செடியில் பூக்கள் பூத்து காய் காய்க்காமல் போவதற்கு மகரந்த சேர்க்கை நடைபெறாமல் போவது தான் முக்கிய காரணம். இந்த செடியை வைக்கும் போது அந்த பிரச்சனை சரியாகி விடும். அதுமட்டுமின்றி இது மூலிகை செடியாதால் இந்த செடி இருக்கும் இடத்தில் கொசு, சிறு பூச்சிகள் போன்றவை அண்டாது. இதனால் வீட்டிற்கு நல்லது தோட்டத்திற்கும் நல்லது.

- Advertisement -

இதன் மருத்துவ குணங்கள் பார்த்தால் ஏராளமாக உண்டு இந்த இலையை கசக்கி முகப்பரு மீது வைத்தால் முகப்பரு சரியாகி விடும். அதே நேரத்தில் இரவில் தூக்கம் வராமல் இருக்கும் போது இந்த இலையை கசக்கி கொஞ்சம் அந்த வாசத்தை நுகர்ந்த பின் தூங்கச் சென்றால் உறக்கம் நன்றாக வரும்.

அது மட்டும் இன்றி இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் இதற்கு உண்டு. இந்த இலை இருக்கும் இடத்தின் காற்றை சுவாசித்தாலே நமக்கு அவ்வளவு நல்லது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தோட்டம் வைத்து இருப்பவர்கள் மண் புழு உற்பத்தியை பெருக்க, இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதும், அதிக செலவு இல்லாமல் செடி, கொடிகளை வளர்த்து விடலாம்.

வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த ஒரு செடியை உங்கள் தோட்டத்தில் வைத்து வளர்த்து பயனடையுங்கள்.

- Advertisement -