வெறும் பத்து ரூபாய் செலவில் உங்க தோட்டத்தில் இருக்க எல்லா செடிக்குமே உரம் தயார் பண்ணலாம் தெரியும்மா?. அப்புறம் பாருங்க உங்க தோட்டம் முழுக்க பூவும் காயும்மா தான் இருக்கும்.

- Advertisement -

வீட்டில் மாடி தோட்டம் வைத்து வளர்ப்பவர்களுக்கு இந்த உரம் மிகவும் உதவியாக இருக்கும். நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்து ஒரு தோட்டத்திற்கே உரம் தயாரிக்க முடியும் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தான். அது என்ன உரம் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை எல்லாம் இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக இந்த செடிகளுக்கு எல்லாம் நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதி இருக்கும் காய்கறி கழிவுகளே நல்ல ஒரு இயற்கையான உரம். இவைகளை அப்படியே காய வைத்து உரமாக கொடுத்தாலும் சரி அல்லது தண்ணீரில் போட்டு நொதிக்க விட்டு அதை தண்ணீருடன் கலந்து தெளித்தாலும் சரி அத்தனை சத்துக்கள் இந்த தண்ணீரில் உள்ளது. இந்தக் குறிப்பில் உள்ள உரத் தயாரிப்பும் அதே போல் தான். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து தான் மிக மிக எளிமையாக இந்த உரத்தை தயார் செய்யப் போகிறோம்.

- Advertisement -

இந்த உரம் தயாரிக்க நமக்கு தேவையான பொருள் கடுகு தான். 50 கிராம் கடுகு இருந்தால் கூட போதும் 30 செடிகளுக்கு இதை பயன்படுத்தி உரம் கொடுக்கலாம். அதற்கு முதலில் கடுகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கடுகு பவுடரை அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும். ஆனால் இதை அப்படியே கலந்து கொடுக்கக் கூடாது அதற்கும் சில வழிமுறைகள் உண்டு.

இந்த கடுகு உரத்தை கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரை லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து வைத்து விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக நொதித்து நுரை பொங்கி இருக்கும். அதன் பிறகு இந்த தண்ணீரை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரை செடிகளுக்கு ஸ்பிரே போல அடித்து விடுங்கள். அதை விட வேர்களுக்கு இந்த தண்ணீரை ஊற்றும் போது மண்ணில் கலந்து நல்ல ஒரு உரமாக மாறும்.

- Advertisement -

இந்த உரத்தை தெளிப்பதற்கு முன் செடிகளில் உள்ள பழுத்த இலைகள், பூச்சி அரித்த இலைகள் ஆகியவற்றை நீக்கி விடுங்கள். அது மட்டுமின்றி செடிகள் பூத்து முடித்து இருந்தாலும் காய்கறி செடிகள் காய் வைத்து முடித்து இருந்தாலும் அதன் முனைகளை எல்லாம் நறுக்கி எடுத்து விட்ட பிறகு இந்த உரத்தை ஊற்றினால் அடுத்த விளைச்சல் மிகவும் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டுச் செடிகள், மாடி தோட்டம் செழித்து வளர சாதாரண ரேஷன் அரிசியில் சக்தி வாய்ந்த உயிர் உரம் எளிதாக தயாரிப்பது எப்படி?

இனி உரம் வாங்க அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் கால்சியம், ஐயன் சத்துக்கள் நிறைந்த இந்த கடுகு உரத்தை வாரம் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். பூச்செடிகளும், காய்கறிகளும் நன்றாக செலுத்து வளர்ந்து பூத்து காய்க்கு தொடங்கும்.

- Advertisement -