இனி வரும் வெயில் காலத்தில் உங்கள் செம்பருத்தி செடி தாறுமாறாக பூக்க, இப்பவே இத கொடுத்துடுங்க அப்புறம் பாருங்க செடியே தெரியாத அளவுக்கு பூக்கள் பூத்துக் குலுங்கும்.

- Advertisement -

வீட்டில் செம்பருத்தி செடியை வளர்ப்பது மிகவும் எளிது இதற்கு பெரிய அளவில் பராமரிப்பு, உரங்கள் என எதுவும் தேவையில்லை. ஆனாலும் சில நேரங்களில் நாம் வைக்கும் செம்பருத்த செடியில் பூக்கள் பூக்காமல் இருக்கும். அப்படியே மொட்டுக்கள் வைத்தாலும் பூக்கும் முன்பே உதிர்ந்து விடும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நாம் செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எப்படி அதற்கு ஊட்டச்சத்து மிக்க உரமாக மாற்றி கொடுப்பது என்பது தான் இந்த வீட்டு தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

செம்பருத்தி செடி நன்றாக பூக்க வேண்டும் என்றால் அதற்கு உயிர் சத்து இருக்க வேண்டும். இது இருந்தால் மட்டுமே செடிகள் பூத்து மொட்டுக்கள் உதிராமல் மலரும். மழைக்காலங்களில் இந்த பிரச்சனை இருக்காது. ஆனால் வெயில் காலங்களில் கண்டிப்பாக செடிகளுக்கு நாம் ஏதாவது ஒரு உயிர் உரம் கொடுத்தே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் கடைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சமையலறையில் இருந்து வேண்டாம் என்று கீழே ஊற்றும் இட்லி மாவு இருந்தால் போதும்.

- Advertisement -

இதற்கு நன்றாக புளித்த இட்லி மாவு தான் வேண்டும். புளிக்காத மாவை பயன்படுத்தக் கூடாது. மாவு எந்த அளவிற்கு புளித்திருக்கிறதோ அந்த அளவு அதில் பாக்டீரியாக்கள் உருவாகி இருக்கும். இந்த மாவை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு கொடுக்கும் போது அதிக அளவு உயிர் சத்துக்கள் கிடைக்கும். இந்த மாவை கரைத்து ஊற்றும் ஊற்றும் போது, அதிக அளவு மாவு கலந்து ஊற்றி விடக் கூடாது. ஒரு கரண்டி மாவு எடுத்தால் அதற்கு ஒரு ஐந்து டம்ளர் தண்ணீராவது சேர்க்க வேண்டும். அதன் பின் மாவு கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்து பிறகு தான் ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றும் போது செடிகளில் உயிர் சத்துக்கள் கிடைக்கும்.

இந்த உரத்தை பலரும் மாவில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அப்படியே செடிகளுக்கு ஊற்றி விடுகிறார்கள். இப்படி ஊற்றும் போது செடிகளில் அதிகமான பூச்சிகள் தோன்றி, செடி பூக்காமல் போவதுடன் செடியும் வீணாகி விடும்.

- Advertisement -

இந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுக்கும் போது கட்டிகள் இல்லாமல் அதிக அளவு தண்ணீரில் கொஞ்சமாக மாவு கலந்து கொடுக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை கொடுத்து வந்தால் போதும். மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை இந்த உயிர் உரம் செடிகளுக்கு எடுத்துக் கொடுக்கும். இதை செடிகளுக்கு ஊற்றும் போது மண்ணை நன்றாக கிளறி வேர் பகுதியில் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: புதிதாக தோட்டம் வைப்பவர்கள் கூட இந்த இயற்கை உரமான தேமோர் கரைச்சலை புழு வண்டுகள் வைக்காமல் எப்படி தயாரிப்பது என்பதை தெரிஞ்கிட்டா போதும், பெரிய தோட்டத்தையே சாதாரணமாக வளர்த்து விடலாம்.

வெயில் காலம் தொடங்கும் முன்பே இந்த ஒரு உரத்தை செடிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தால், செடியை தெரியாத அளவிற்கு பூக்கள் பூத்துக் குலுங்கும். இதை காய்கறி மற்ற பூ செடிகளுக்கும் கூட கொடுக்கலாம் அனைத்துமே நன்றாக செழித்து வளரும்.

- Advertisement -